இந்திய அணியே தற்போது இவங்க 2 பேரால இரண்டாக பிளவு பட்டுள்ளது – டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 296 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியால் 265 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தவான் மற்றும் கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை தவிர எந்த ஒரு வீரரும் சரியாக விளையாடவில்லை.

dhawan

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : நடைபெற்றுவரும் இந்த போட்டிகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இந்திய அணி தற்போது இரண்டு குழுவாகப் பிரிந்து உள்ளது. கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது தலைமையில் அணி தற்போது பிளவுபட்டு உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

ஏனெனில் கோலி கேப்டனாக இருக்கும் போது மிகவும் ஆக்ரோஷத்துடன் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடக் கூடியவர். ஆனால் தற்போது அவர் அந்த மனநிலையில் இல்லை என்பது அவர் விளையாடும் போதே தெரிகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த பிறகு ஒருநாள் தொடரில் சிறப்பாக மீண்டு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ராகுலிடம் கேப்டன்சியில் ஒரு ஸ்பார்க் இல்லை. அதோடு இந்த ஒருநாள் அணியை வழிநடத்திச் செல்லும் அவர் பல தவறுகளை செய்து வருகிறார்.

rahul 2

முக்கியமாக அணி வீரர்களின் தேர்வு மற்றும் அவர்களை பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் ராகுல் கவனம் செலுத்தவேண்டும். பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் அவருக்கு இன்னும் கவனம் தேவை. இந்திய அணி ஒரு பலம்வாய்ந்த அணி அந்த அணியை மேலும் தரம் உயர்த்த அவரது பங்களிப்பு அவசியம். பந்துவீச்சில் கூட தற்போது இந்திய அணி சோடை போய் வருகிறது. புவனேஸ்வர் குமார் அதிக ரன்களை விட்டு தருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்ட 3 கிரிக்கெட் வீரர்கள். அலேக்காக அள்ளிய போலீஸ் – என்ன நடந்தது?

அதோடு அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோரின் இணை விக்கெட்டுகளை வீழ்த்த திணறுகிறது. வெங்கடேஷை ஆல்-ரவுண்டராக களமிறக்கும் போது அவரை பந்து வீசாமல் வைத்திருப்பதும் தவறு அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இந்த தவறை எல்லாம் திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement