பட்டாசு, இனிப்போட காத்திருந்தோம்.. அம்மாவிடம் மனமுடைஞ்சுட்டான்.. ரிங்குவின் அப்பா ஏமாற்ற பேட்டி

Rinku Father
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த 15 பேர் அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த அணியில் ஒரு தமிழ்நாடு வீரர்கள் கூட இடம் பெறாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதே போல கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது பல ரசிகர்களுக்கும் சில முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

கசப்பான இனிப்பு:
ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக விளையாடிய அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் தொடரில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதனால் தோனிக்கு பின் இந்திய அணிக்காக சிறந்த ஃபினிஷராக ரிங்கு கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டினார். ஆனால் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய ஒரே காரணத்தால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு கண்துடைப்புக்காக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டும் இணைத்துள்ளது. இந்நிலையில் முதன்மை உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரிங்கு சிங் மனமுடைந்ததாக அவருடைய அப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைசியில் ஏமாற்றமும் இருந்தது. இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பட்டாசுகள், இனிப்புகளுடன் காத்திருந்தோம். இப்போதும் ரிசர்வ் பட்டியலில் இடம் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி”

இதையும் படிங்க: டாஸ் விழவே மாட்டேன்து.. பதிரனா, தேஷ்பாண்டே விலகல்.. அறிமுகமான வெளிநாட்டு வீரர்.. 4 மாற்றத்துடன் ருதுராஜ் பேட்டி

“இருப்பினும் தனது அம்மாவிடம் பேசிய அவர் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தார். அதற்காக அவர் இதயம் உடைந்தது போல் இல்லை. ஆனால் இந்திய அணியில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று அவர் தனது அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் 15 பேர் கொண்ட அணிகள் கூட ரிங்கு இடம் பெறவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் வேறு ஏதேனும் பேட்ஸ்மேன்கள் காயத்தை சந்தித்தால் ரிங்கு முதன்மை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement