சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்ட 3 கிரிக்கெட் வீரர்கள். அலேக்காக அள்ளிய போலீஸ் – என்ன நடந்தது?

police
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் துவங்கிய இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தது.

அதன்பின் சிட்னி நகரில் நடந்த 4வது போட்டியை போராடி ட்ரா செய்த இங்கிலாந்து ஹோபார்ட் நகரில் நடந்த 5வது போட்டியில் மீண்டும் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக 4 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்று மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

சரக்கு செய்த வேலை:
இந்த தொடரின் 5வது டெஸ்ட் போட்டி முடிந்த பின் அந்த வெற்றியைக் கொண்டாடத் துவங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் மது அருந்திக்கொண்டு மதுக்கோப்பைகளை கையில் ஏந்தி மிகுந்த மகிழ்ச்சியுடன் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஒரு சில மணி நேரங்களுக்குப் பின் இந்த கொண்டாட்டத்தில் தோல்வியையும் மறந்த ஒரு சில இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து மதுவை அருந்திவிட்டு ஆட்டம் போடத் தொடங்கினார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து அணியினரின் உடைமாற்றும் ஹோட்டல் அறைக்கு வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் நேதன் லையன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி அங்கே இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருடன் மதுபோதையில் மிகவும் சத்தமாக ஆட்டம் போட்டனர்.

- Advertisement -

களமிறங்கிய போலீஸ்:
நேரம் ஆகஆக இந்த வீரர்கள் இணைந்து அதிகமாக கூச்சலிட்ட காரணத்தால் அந்தப் போட்டி நடந்த ஹோபார்ட் கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் அவர்களை ஹோட்டல் அறையை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். ஆனால் அதை மதிக்காத ஜோ ரூட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து போதையில் ஆட்டம் போட்டதால் வேறு வழியின்றி போலீஸ் வரவழைக்க பட்டது.

ஹோபார்ட் நகரில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் இந்த செயல் நடந்ததை அறிந்த டாஸ்மானியா போலீஸ் உடனடியாக அங்கு களமிறங்கி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

வைரலான வீடியோ:
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அதை உலகம் முழுவதிலும் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்தால் அந்த வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் மாறின.

அந்த வீடியோ இதோ :
இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பார்வைக்கு சென்றது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அந்த தருணத்தில் விதிமுறைகளை மதிக்காமல் ஆட்டம் போட்ட வீரர்களை பற்றி விசாரிக்க தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா தோற்றாலும் கடைசி வரை நின்று தூள் கிளப்பிய தாக்கூர் ! 25 ஆண்டுகளுக்கு பின் சூப்பர் சாதனை

விசாரிக்கும் இங்கிலாந்து:
இது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆஷஸ் தொடர் முடிந்த அந்த நாளின் காலை வேளையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் மதுவை பகிர்ந்துகொண்டு அதிகமாக கூச்சலிட்டுள்ளார்கள். அந்த சத்தம் அருகில் இருந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர்களை அதிகம் பாதித்ததால் அவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். இதனால் உள்ளூர் காவல்துறை களத்தில் இறங்கியது” என தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement