இந்தியா தோற்றாலும் கடைசி வரை நின்று தூள் கிளப்பிய தாக்கூர் ! 25 ஆண்டுகளுக்கு பின் சூப்பர் சாதனை

Thakur
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜனவரி 19 அன்று பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை போல சொந்த மண்ணில் மீண்டும் இந்தியாவை சாய்த்து 1 – 0* என இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 296/4 ரன்கள் எடுத்தது.

RSA

- Advertisement -

இந்தியா தோல்வி :
இதை தொடர்ந்து 297 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஷிகர் தவான் 79 ரன்களும் விராட் கோலி 51 ரன்களும் எடுக்க இந்தியா வெற்றியை நோக்கி நடந்தது. ஆனாலும் முக்கியமான நேரத்தில் இவர்கள் அவுட்டாக அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இறுதியில் 50 ஓவர்களில் 265/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது.

தூள் கிளப்பிய தாக்கூர்:
இந்த போட்டியில் 199/7 என தோல்வியின் பக்கம் சாய்ந்த இந்தியா ஒரு கட்டத்தில் விரைவில் ஆல் அவுட்டாகி படுதோல்வி அடையும் நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய இந்திய வீரர் ஷர்துல் தாகூர் ஆல் அவுட்டாக இருந்த இந்தியாவை கடைசி வரை நின்று மானம் போகாமல் ஓரளவு காப்பாற்றினார் என்றே கூறலாம்.

thakur 1

கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்க பவுலர்களை சிதறடித்த இவர் கடைசி வரை நின்று விளையாடி 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 50வது ஓவரின் கடைசி பந்தில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
இந்த போட்டியில் 8-வது இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்த ஷர்துல் தாக்கூர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 8வது இடத்தில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சூப்பர் சாதனையை சத்தமின்றி படைத்துள்ளார். இதுபோன்ற சாதனையை கடைசியாக கடந்த 1997ஆம் ஆண்டு முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் செய்துள்ளார். தற்போது 25 ஆண்டுகள் கழித்து தாகூர் அதை செய்துள்ளார்.

thakur 3

ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 8வது இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த இந்திய வீரர்கள்:
1. 55 ரன்கள் – சபா கரீம், ப்ளூம்போய்ட்டன் மைதானம், 1997.
2. 50* ரன்கள் ஷார்துல் தாகூர், பார்ல் மைதானம், 2022*.

- Advertisement -

தாகூர் – பும்ரா ஜோடி:
அத்துடன் இந்த போட்டியில் 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷார்துல் தாகூர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 51* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர்.

இதையும் படிங்க : மக்களின் ஆதரவுடன் நாளை புதிய பொறுப்பினை ஏற்கப்போகும் ஹார்டிக் பாண்டியா – ஜாக்பாட் தான்

ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9வது விக்கெட்டுக்கு 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடிகள் இதோ:
1. அஜய் ஜடேஜா – ஜவகள் ஸ்ரீநாத், 2000.
2. யூசுப் பதான் – ஜஹீர் கான், 2011.
3. ஷார்துல் தாகூர் – ஜஸ்பிரித் பும்ரா, 2022*.

Advertisement