மக்களின் ஆதரவுடன் நாளை புதிய பொறுப்பினை ஏற்கப்போகும் ஹார்டிக் பாண்டியா – ஜாக்பாட் தான்

Pandya
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் 15 வது சீசனானது எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் துவங்கும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஏற்கனவே இந்த தொடரில் விளையாடி வரும் எட்டு அணிகளுடன் புதிய இரண்டு அணிகள் சேர்ந்து 10 அணிகளுடன் இந்த சீசன் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.

Rashid

- Advertisement -

இதில் புதிதாக தற்போது இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இந்த ஏலத்திற்கு முன்னரே தாங்கள் தக்க வைக்க நினைக்கும் 3 வீரர்களின் பட்டியலை ஜனவரி 22-ஆம் தேதி நாளை ஐபிஎல் நிர்வாகக் குழுவில் இடம் சமர்ப்பிக்க உள்ளனர். அந்த வகையில் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்கள் அணியில் இணைக்க வேண்டிய வீரர்களை தேர்வு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக அகமதாபாத் அணி கேப்டனாக மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவை அறிவிக்க ஆவலாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பாண்டியா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதனால் உள்ளூர் மக்களை ஈர்க்கும் விதமாக அவருக்கு இந்த கேப்டன் பதவி வழங்கப்பட உள்ளது. எனவே மக்களின் ஆதரவுடன் ஹர்திக் பாண்டியா நாளை முதல் முறையாக ஐபிஎல் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ahmedabad

அவரைத்தவிர்த்து அகமதாபாத் அணியில் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறிய ரஷித் கான் மற்றும் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய தொடக்க வீரர் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்க 2 பேர்ல ஒருத்தர டீம்ல சேருங்க. அப்போதான் 2 ஆவது மேட்சை ஜெயிக்க முடியும் – தினேஷ் கார்த்திக்

அதுமட்டுமின்றி மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 15 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியால் கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement