இவங்க 2 பேர்ல ஒருத்தர டீம்ல சேருங்க. அப்போதான் 2 ஆவது மேட்சை ஜெயிக்க முடியும் – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி இன்று மதியம் 2 மணி அளவில் போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து உள்ளதால் இன்றைய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Rahul

- Advertisement -

ஏனெனில் இன்றைய போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது உள்ள இந்திய அணியின் பௌலிங் அட்டாக்கி இன்னும் சற்று வேகத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

karthik

அந்த வகையில் இன்றைய 2-வது போட்டியில் ஆடும் பிளேயிங் லெவனில் அதிவேகமாக பந்துவீசக்கூடிய சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மேலும் பும்ரா அல்லது புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு அணி நிர்வாகம் ஓய்வு கொடுக்கலாம் அது தான் சிறந்த முடிவாக இருக்கும். ஏனெனில் கடந்த போட்டியின் போது மிடில் ஓவர்களில் இந்திய அணியால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டி : இந்திய அணியின் பிளேயிங் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

என்னை பொருத்தவரை இந்த இருவரால் அதை செய்ய முடியும் என நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார் .அவர் கூறியது போலவே பும்ராவை தவித்து கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அதிவேகமாக பந்து வீச கூடியவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement