இரண்டாவது ஒருநாள் போட்டி : இந்திய அணியின் பிளேயிங் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இரண்டாவது போட்டி அதே போலந்து பார்க் மைதானத்தில் (ஜனவரி 21) இன்று மதியம் 2 மணி அளவில் துவங்க உள்ளது.

INDvsRSA toss

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் அதிக கவனத்துடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியை இந்த போட்டியில் வீழ்த்தினால் தொடரை கைப்பற்ற முடியும் என்பதன் காரணமாக உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது. நிச்சயம் இப்போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் விருந்து படைக்கும் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது குறித்த பதிவு தான் இது. அதன்படி கடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அதுமட்டுமின்றி கேப்டனாக ராகுல் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளதால் அந்த முதல் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்ய விரும்பமாட்டார்.

Rahul

எனவே நிச்சயம் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. ஒருவேளை இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி பெறும் பட்சத்தில் கடைசி போட்டியில் வேண்டும் என்றால் மாற்றம் இருக்கும். அதனை தவிர்த்து இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய வாழ்வா சாவா 2-வது போட்டியில் இந்திய அணியில் செய்யவேண்டிம் மாற்றங்கள் – விவரம் இதோ

ஷிகர் தவான், கே.எல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வென்ற சஹால், ஷார்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement