இன்றைய வாழ்வா சாவா 2-வது போட்டியில் இந்திய அணியில் செய்யவேண்டிம் மாற்றங்கள் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்த முதல் போட்டியில் தென்னாபிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 296/4 ரன்களை குவித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவிற்கு அனுபவ வீரர்கள் ஷிகர் தவான் 79 ரன்களும் விராட் கோலி 52 ரன்களும் எடுத்த நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா தோல்வி அடைந்தது.

dhawan

- Advertisement -

வாழ்வா சாவா போட்டி :
இதை அடுத்து இந்த தொடரின் 2வது போட்டி ஜனவரி 21-ஆம் தேதி இன்று மீண்டும் அதே பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்தியாவால் வெல்ல முடியும். முதல் போட்டியில் கேப்டன்ஷிப், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி தோல்வி அடைந்ததால் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நிகழப்போகும் ஒரு சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்:

1. ஓப்பனிங் ஜோடி: ரோகித் சர்மா இல்லாத இந்த நேரத்தில் ஓபனிங் வீரராக விளையாட விரும்புவதாக இந்த தொடர் துவங்கும் முன் கே.எல் ராகுல் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 2013 முதல் இந்திய ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளார்கள்.

gaikwad

அத்துடன் 2023 உலககோப்பையை பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வேளையில் ரோகித் சர்மா இடத்தில் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை 2021 ஆகிய தொடர்களில் பட்டைய கிளப்பிய ருத்ராஜ் கைக்வாட்க்கு வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் 79 ரன்கள் விளாசிய அனுபவ வீரர் ஷிகர் தவானை ஒதுக்க முடியாது.

- Advertisement -

மிடில் ஆர்டர் :
3வது இடத்தில் விராட் கோலி எவ்வித கேள்வியுமின்றி விளையாடும் வேளையில் 4வது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாம். 5வது இடத்தில் தான் கேஎல் ராகுல் விளையாட வேண்டும், அது தான் இந்திய அணிக்கும் நல்லது. அத்துடன் ஏற்கனவே இவர் 4, 5 ஆகிய இடங்களில் விளையாடி அதில் வெற்றியையும் காண்பித்தவர்.6வது இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடலாம்.

rahul 1

ஆல் ரவுண்டர்:
முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு கேஎல் ராகுல் ஒரு ஓவர் கூட பந்துவீச கொடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தினால் அதற்கு சூரியகுமார் யாதவை விளையாட வைக்கலாமே? எனவே ஆல் ரவுண்டர் இடத்தில் தொடர்ந்து வெங்கடேச ஐயர் விளையாடலாம் ஆனால் பந்து வீசியே தீரவேண்டும்.

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் பந்துவீச்சில் சோடை போனாலும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கடைசி வரை நின்று 50* ரன்கள் விளாசிய மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துல் தாகூருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்.

venkatesh

பந்துவீச்சாளர்கள்:
சுழல் பந்து வீச்சாளர்களாக முதல் போட்டியில் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சஹால் கூட்டணியை தொடரலாம். வேக பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் தொடர்வார்கள் என நம்பலாம்.

இதையும் படிங்க : 2021 கனவு டெஸ்ட் அணியை அறிவித்த ஐசிசி ! 3 இந்திய வீரர்களுக்கு இடம் – யார்யார் பாருங்க

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வென்ற சஹால், ஷார்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement