2021 கனவு டெஸ்ட் அணியை அறிவித்த ஐசிசி ! 3 இந்திய வீரர்களுக்கு இடம் – யார்யார் பாருங்க

williamson 1
- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட கனவு டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு சிறந்து விளங்கிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கனவு அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி உள்ளிட்ட எந்த ஒரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்காதது இந்திய ரசிகர்களை ஏமாற்றினாலும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 3 இந்திய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

IND

- Advertisement -

இந்திய வீரர்கள்:
ஐசிசி அறிவித்துள்ள இந்த கனவு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1. ரோஹித் சர்மா : இந்தியாவின் நட்சத்திர தொடக்க வீரர் ரோகித் சர்மா கடந்த 2019க்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக பேட்டிங் செய்யத் துவங்கினார். குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியிலும் சதம் விளாசினார்.

Rohith

சென்னை மற்றும் ஓவல் என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதம் அடித்த அவர் கடந்த வருடம் 906 ரன்களை 47.68 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் குவித்து ஐசிசி கனவு டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

2. ரிஷப் பண்ட் :
கடந்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ செய்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் 89* ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டது காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாகும்.

pant 2

அதன்பின் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சதமடித்த இவர் கடந்த 2021இல் 748 ரன்களை 39.36 என்ற சராசரியில் குவித்து அசத்தினார். விக்கெட் கீப்பராக 39 டிஸ்மிஸல்ஸ் செய்துள்ள இவரை தனது கனவு அணியின் விக்கெட் கீப்பராக ஐசிசி தேர்வு செய்து கௌரவப்படுத்தியுள்ளது.

- Advertisement -

3. ரவிச்சந்திரன் அஷ்வின் : தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி 2021ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் உலகஅளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

Ashwin

அத்துடன் பேட்டிங்கில் 355 ரன்களை அடித்த இவர் ஐசிசி அறிவித்துள்ள இந்த கனவு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஒரே சுழல்பந்து வீச்சாளர் என்பது இந்தியாவுக்கு பெருமைக்குரிய அம்சமாகும்.

- Advertisement -

கனவு டெஸ்ட் அணி:
இவர்களுடன் இலங்கையின் நட்சத்திர வீரர் திமுத் கருணாரத்னே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன், கடந்த வருடம் ரன் மழை பொழிந்த இங்கிலாந்தின் ஜோ ரூட், பாகிஸ்தானின் பாவத் ஆலம் ஆகியோர் ஐசிசி அறிவித்துள்ள இந்த கனவு அணியில் பேட்டர்களாக இடம் பிடித்துள்ளார்கள். நியூஸிலாந்தின் கைல் ஜமிசன், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோர் இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Williamson

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்தின் சாம்பியன் கேப்டன் “கேன் வில்லியம்சன்” இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 2021 ஆண்டிற்கான சிறந்த டி20, ஒன்டே அணியை அறிவித்த ஐசிசி – ஒரு இந்தியர்களுக்கு கூட இடமில்லை

ஐசிசி அறிவித்துள்ள கனவு டெஸ்ட் அணி 2021 இதோ :
திமுத் கருணாரத்னே, ரோஹித் சர்மா, மார்னஸ் லபுஸ்ஷேன், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் (கேப்டன்), பாவத் ஆலம், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், கைல் ஜமிசன், ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி.

Advertisement