2021 ஆண்டிற்கான சிறந்த டி20, ஒன்டே அணியை அறிவித்த ஐசிசி – ஒரு இந்தியர்களுக்கு கூட இடமில்லை

INDvsPAK
- Advertisement -

ஆங்கில வருடம் 2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022 புத்தாண்டு கோலாகலமாக பிறந்துள்ளது. இந்த வேளையில் கடந்த வருடம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி பல வெற்றிகளை குவித்த வீரர்கள் அடங்கிய கனவு ஒருநாள் மற்றும் டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட எந்த ஒரு தரமான இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rizwan

- Advertisement -

கனவு டி20 அணி:
இதில் முதலாவதாக 2021ஆம் ஆண்டிற்கான கனவு டி20 அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மிடில் ஆர்டர் வரிசையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்ரம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ், தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேவிட் மில்லர் அகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த அணியில் சுழல்பந்து வீச்சாளர்களாக இலங்கையை சேர்ந்த வணிந்து ஹஸரங்கா மற்றும் தென்ஆப்பிரிக்காவின் தப்ரிஸ் சம்சி ஆகியோர் இடம் பிடிக்க வேகப்பந்து வீச்சாளர்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஸ் ஹெஸல்வுட், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி, வங்கதேசத்தின் முஸ்தபிஸுர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளனர்.

azam-1

பாபர் அசாம் கேப்டன்:
இந்த கனவு அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஐசிசி டி20 கனவு அணி 2021 இதோ:

ஜோஸ் பட்லர், முகமத் ரிஸ்வான் (கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், மிட்சேல் மார்ஷ், டேவிட் மில்லர், வணிந்து ஹஸரங்கா, தப்ரிஸ் சம்சி, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷாஹீன் அப்ரிடி, ஜோஸ் ஹேசல்வுட்.

- Advertisement -

shaheen afridi

ஒருநாள் அணி:
இதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு ஒருநாள் அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியிலும் ஒரு இந்திய வீரர் கூட இடம் பிடிக்காத நிலையில் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் தொடக்க வீரர்களாக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டெர்லிங் மற்றும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த மாலன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மிடில் ஆர்டரில் தென்னாபிரிக்காவின் ராசி வேன்டர் டுஷன், பாகிஸ்தானின் பாகர் ஜமான், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகர் ரஹீம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சு துறையில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், அயர்லாந்தின் சிமி சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

vanderdussen

ஐசிசி கனவு 2021 ஒருநாள் அணி இதோ :
பால் ஸ்டெர்லிங், யானெமன் மாலன், பாபர் அசாம் (கேப்டன்), பாகர் ஜமான், ராசி வேன்டர் டுஷன், சாகிப் அல் ஹசன், முஸ்பிகர் ரஹீம் (கீப்பர்), வணிந்து ஹஸரங்கா, முஸ்தபிஸுர் ரஹ்மான், சிமி சிங், துஷ்மந்தா சமீரா.

இதையும் படிங்க : வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க 24 மணிநேர கெடு மட்டுமே உள்ளது – ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த தெ.ஆ வீரர்

காரணம் என்ன:
கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை தவிர பெரிய அளவில் இந்தியா 20 ஓவர் தொடர்களில் பங்கேற்க வில்லை. அதே போல் வெறும் 2 ஒருநாள் தொடர்களில் மட்டுமே பங்கேற்றது. இத்துடன் இந்தியா மற்றும் துபாய் ஆகிய 2 நாடுகளில் ஐபிஎல் 2021 தொடர் 2 பகுதிகளாக நடைபெற்றதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement