வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க 24 மணிநேர கெடு மட்டுமே உள்ளது – ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த தெ.ஆ வீரர்

Rahul-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று துவங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 296/4 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஒரு கட்டத்தில் 68/3 என தள்ளாடிய தென்ஆப்பிரிக்காவை அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா மற்றும் ராசி வேன்டர்டுஷன் ஜோடி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றியது. இதில் சதமடித்த பவுமா 110 ரன்களும், டுஷன் 129* ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இந்தியா மோசம்:
இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா அபாரமாக பந்துவீசிய போதிலும் இறுதியில் மோசமான பந்துவீச்சு காரணமாக 297 என்ற இலக்கை இந்தியா துரத்தியது. அப்போது கேப்டன் ராகுல் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அனுபவ வீரர்கள் ஷிகர் தவான் 79 ரன்களும் விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததால் இந்தியாவின் வெற்றி ஓரளவு உறுதியானது.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இறுதியில் எதிர்பாராத வண்ணம் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மொத்தத்தில் இந்த போட்டியில் மோசமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் காரணமாக இந்தியா தோல்வியை சந்தித்தது.

dhawan

மோசமான கேப்டன்ஷிப் :
இப்போட்டியில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த கே எல் ராகுல் தோல்வியின் காரணமாக பல விமர்சனங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக அறிமுக போட்டியில் ஆல்-ரவுண்டராக வாய்ப்பு பெற்ற வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இதேபோல 2வது போட்டியிலும் ராகுல் கேப்டன்ஷிப் செய்தால் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் எச்சரித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

Kohli

“கேப்டனாக ராகுலுக்கு ஒருநாள் நல்லநாள் அமைந்தது, தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு சில சிறிய விஷயங்களில் வித்தியாசங்கள் இருந்தன. குறிப்பாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்ட திட்டங்களில் வித்தியாசங்கள் தெரிந்தன. பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க வீரர்கள் சற்று நடந்து சென்று விளையாடினார்கள். ஆனால் இந்திய வீரர்கள் கிரீஸ் எனப்படும் வெள்ளை கோட்டிலேயே நின்று விளையாடினார்கள். இது போன்ற சிறிய விஷயங்களில் கேஎல் ராகுல் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது”

- Advertisement -

என தெரிவித்த டேல் ஸ்டைன் முதல் போட்டியிலேயே ராகுல் கேப்டன்ஷிப் அந்த அளவுக்கு மோசமில்லை எனவும் ஒருசில சிறிய மாற்றங்களை செய்தால் வெற்றியை பெறலாம் எனவும் கூறினார்.

rahul 2

24 மணிநேரம்:
“கேப்டனாக இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறோம், மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து விளையாடுகிறோம் என்பனவற்றை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணியில் இருக்கும் ஒரு சில வீரர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடி பல நாட்கள் ஆகிவிட்டன என்பதால் லேசான சுணக்கம் உள்ளது. ஆனாலும் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா எதை சரியாக செய்தது என்பதை புரிந்து கொண்டு தங்கள் அணியில் மாற்றங்களை செய்ய அவருக்கு இன்னும் 24 மணி நேரங்கள் மட்டுமே உள்ளது”

- Advertisement -

என இது பற்றி மேலும் தெரிவித்த டேல் ஸ்டெய்ன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் துவங்க இருக்கும் 2-வது போட்டியில் தேவையான மாற்றங்களை செய்யாவிட்டால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அம்பத்தி ராயுடுவின் சாபம் : 2019 முதல் இன்னும் தீராமல் இருந்து வரும் பிரச்சனை – (ஒரு அலசல்)

அவர் கூறுவது போல 2வது ஒருநாள் போட்டி நாளை மதியம் 2 மணிக்கு அதே பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. அதில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை வெற்றி பெற முடியும். இல்லையேல் வைட்வாஷ் தோல்வி அடையவும் வாய்ப்புள்ளது.

Advertisement