அம்பத்தி ராயுடுவின் சாபம் : 2019 முதல் இன்னும் தீராமல் இருந்து வரும் பிரச்சனை – (ஒரு அலசல்)

Rayudu
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக நேற்று துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய தென்னாப்பிரிக்காவை இந்தியா சிறப்பாக பந்துவீசி ஆரம்பத்தில் கட்டுப்படுத்தியது.

RSA

- Advertisement -

மோசமான மிடில் ஆர்டர்:
அப்போது 68/3 என திண்டாடிய தங்கள் அணியை சதம் அடித்த கேப்டன் பாவுமா 110 ரன்களும் வேண்டர்டுசைன் 129* ரன்களும் விளாசி காப்பற்றினார்கள். ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசிய போதிலும் இறுதியில் கோட்டைவிட்ட இந்தியா பின்னர் 297 என்ற இலக்கை துரத்தியது. அப்போது அனுபவ வீரர்கள் ஷிகர் தவான் 79 ரன்களும் விராட் கோலி 51 ரன்களும் எடுத்ததால் 152/3 என்று நல்ல நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் அடுத்து வந்த ரிஷப் பண்ட் 16, ஷ்ரேயஸ் ஐயர் 17, வெங்கடேஷ் ஐயர் 2 என இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் கடைசியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

2019 முதல் :
இதுபோல ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புவது இது புதிதல்ல. ஆம் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே இந்த பிரச்சனை இருந்து வந்தது. குறிப்பாக 4வது இடத்தில் இந்தியாவுக்கு பேட்டிங் செய்ய தகுதியான வீரர் யார்? என்பதே 2019ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் தலைப்புச் செய்தியாக இருந்தது. அந்த இடத்தில் விஜய் சங்கர், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என பல வீரர்களை இந்திய அணி நிர்வாகம் சோதித்து பார்த்த போதிலும் இதுவரை ஒரு பலனும் அளிக்கவில்லை.

Rayudu

அம்பத்தி ராயுடுவின் சாபமா :
ஆனால் 3 வருடங்கள் முடிந்தும் இந்த பிரச்சனை தொடர்வதை பார்த்தால் இது அம்பத்தி ராயுடுவின் சாபமா என யோசிக்க வைக்கிறது. அதாவது அம்பத்தி ராயுடுவை சரியாக பயன்படுத்தாமல் இந்தியா கோட்டைவிட்டு விட்டதா என யோசிக்க வைக்கிறது.

- Advertisement -

ஆம் கடந்த 2018ஆம் ஆண்டு வாக்கில் அம்பாத்தி ராயுடு இந்த 4வது இடத்தில் அபாரமாக பேட்டிங் செய்து 2019 உலக கோப்பையில் இந்திய அணியில் விளையாடும் ஒருவராக அறியப்பட்டார். ஆனால் 4வது இடத்தில் விளையாடும் ஒருவருக்கு பந்து வீச தெரிந்திருக்க வேண்டும் என கருதிய தேர்வு குழுவினர் அவரை கழட்டி விட்டுவிட்டு தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்தனர்.

தவறான முடிவு:
அதனால் விரக்தி அடைந்த ராயுடு டுவிட்டரில் “3டி ட்வீட்” போட்டதால் அவரை பழிவாங்க நினைத்த பிசிசிஐ பின்னர் நடந்த உலகக்கோப்பையில் விஜய் சங்கர் காயம் அடைந்தபோது அவருக்கு வாய்ப்பளிக்காமல் மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்தது. இதனால் மனமுடைந்த ராயுடு கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி முடிவெடுத்தார்.

- Advertisement -

ஒருவேளை 2019ஆம் ஆண்டு ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவரால் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்திருக்கும்.

Raina

தோனி, யுவி, ரெய்னா காரணம்:
இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் எம்எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஓய்வும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருந்த இவர்கள் 2018 – 2019 காலகட்டங்களில் ஓய்வு பெற்றார்கள்.

இதையும் படிங்க : தெ.ஆ டெஸ்ட் தோல்வி எதிரொலி! நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா – இப்போ எந்த இடம் தெரியுமா?

அவர்களின் ஓய்வுக்குப் பின் 3 வருடங்கள் கழித்தும் அவர்களுக்கு நிகரான வீரர்கள் இன்னும் கிடைக்காததே இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் இன்றும் தடுமாறுகிறது என்பதே உண்மையாகும்.

Advertisement