தெ.ஆ டெஸ்ட் தோல்வி எதிரொலி! நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா – இப்போ எந்த இடம் தெரியுமா?

IND
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் எனப்படும் ஐசிசி ஒவ்வொரு தொடருக்கும் பின்னும் புதுப்பிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர், தென்ஆப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதி வந்த டெஸ்ட் தொடர், நியூஸிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதி வந்த டெஸ்ட் தொடர் ஆகிய 3 முக்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர்கள் கடந்த வாரம் நடைபெற்ற முடிந்தன.

INDvsRSA

- Advertisement -

இதில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4 – 0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா இந்த தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து உலகின் புதிய நம்பர் – 1 டெஸ்ட் அணியாக சாதனை படைத்துள்ளது.

சறுக்கிய இந்தியா:
புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பட் கம்மின்ஸ் தலைமையில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் தொடரை அடுத்தடுத்த வெற்றிகளால் கைப்பற்றிய ஆஸ்திரேலியா புதிய நம்பர் ஒன் அணியாக உயர்ந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. மறுபுறம் தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து 2 – 1 என தொடரை இழந்தது.

aus vs eng

பறிபோன நம்பர் 1 இடம்:
விராட் கோலி தலைமையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா டீன் எல்கர் தலைமையிலான அனுபவமில்லாத கத்துக்குட்டி தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்ததால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளது.

- Advertisement -

அந்த தொடரில் மோசமாக செயல்பட்டு 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றதன் காரணமாக முதலிடத்தை இழந்தது மட்டுமல்லாமல் 116 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இதே 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது 119 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

IND

சரிவு ஆரம்பமா:
நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்த இந்தியாவை சாய்த்ததால் 6வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா 5வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1 – 1 என சமன் செய்த நியூசிலாந்து தொடர்ந்து 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்து வந்த இந்தியா தற்போது முதலிடத்தை இழந்துள்ளது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த விராட் கோலி திடீரென கடந்த வாரம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க : தோனி மற்றும் கோலி கூட செய்யாத சாதனையை முதல் போட்டியிலேயே நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

கடந்த 2016 முதல் அவர் தலைமையில் தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வெற்றி நடை போட்டு வந்த இந்தியா தற்போது அந்த இடத்தை பறிகொடுத்துள்ளது. இனி கேப்டனாக விராட் கோலி இல்லாத காரணத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவு ஆரம்பமாகிறதா என்ற கலக்கம் இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement