தோனி மற்றும் கோலி கூட செய்யாத சாதனையை முதல் போட்டியிலேயே நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

Rahul-toss
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்போது இரண்டாவது போட்டியில் முதுகுவலி காரணமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. இதன் காரணமாக அந்தப் போட்டியின் போது முதல்முறையாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கே.எல் ராகுல் பதவி வகித்து விளையாடினார். அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அணியின் கேப்டனாக ரோகித் அறிவிக்கப்பட்டார்.

rahul 2

- Advertisement -

ஆனால் காயம் காரணமாக ரோகித் சர்மா இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து வெளியேறிய பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் ராகுலுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக முதல் முறையாக ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக மாறினார்.

இந்நிலையில் தான் சந்தித்த முதல் போட்டியிலேயே ராகுல் தோல்வியை சந்தித்து இருந்தாலும் நிச்சயம் இந்திய அணியின் சிறப்பான கேப்டனாக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. முதல் போட்டியிலேயே அவர் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்வேளையில் சில சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

Rahul-1

அந்த வகையில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் 50 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையில் ராகுல் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக மொகிந்தர் அமர்நாத் 1984ஆம் ஆண்டு 35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இருந்த வேளையில் இந்திய அணிக்கு கேப்டனாக மாறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய கேப்டனாக சேவாக்கின் சாதனையை முறியடித்த கே.எல் ராகுல் – தோத்தாலும் இப்படி ஒரு சாதனையா?

தற்போது ராகுல் அவரை தொடர்ந்து இந்திய அணிக்காக 39 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய வேளையில் இந்திய அணியின் கேப்டனாக சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement