இந்திய கேப்டனாக சேவாக்கின் சாதனையை முறியடித்த கே.எல் ராகுல் – தோத்தாலும் இப்படி ஒரு சாதனையா?

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

INDvsRSA toss

அதன் காரணமாக புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அதன்படி ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த முதல் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அறிமுகமான ராகுல் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தார். அதனை தொடர்ந்து தற்போது தான் தலைமை ஏற்று வழி நடத்திய முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இப்படி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தாலும் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ராகுலே பார்க்கப்படுகிறார்.

rahul 2

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின்போது கேப்டனாக பதவியேற்ற ராகுல் தனது முதல் போட்டியிலேயே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சையது கிர்மானி மற்றும் வீரேந்திர ஷேவாக் ஆகியோரது சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்த வகையில் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்படும் முன்னர் எந்தவித உள்ளூர் போட்டியிலோ அல்லது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலோ கூட கேப்டனாக செயல்படாமல் நேரடியாக இந்திய தேசிய அணிக்கு கேப்டனாக மாறிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6 முக்கிய வீரர்களுக்கு கொரோனா. இருப்பினும் இந்தியா பெற்ற மாஸ் வெற்றி! சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சையது கிர்மானி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் மட்டுமே உள்ளூர் போட்டிகளிலும் சரி, மாநில அளவிலான போட்டிகளிலும் சரி கேப்டனாக செயல்படாமல் நேரடியாக இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை வகித்தனர். அந்த வகையில் தற்போது மூன்றாவது வீரராக எந்தவித உள்ளூர் போட்டிகளிலும் கேப்டனாக செயல்படாமல் கே.எல் ராகுல் நேரடியாக இந்திய தேசிய அணியின் கேப்டனாக மாறியுள்ளது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement