6 முக்கிய வீரர்களுக்கு கொரோனா. இருப்பினும் இந்தியா பெற்ற மாஸ் வெற்றி! சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி

u 19 1
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் வருங்கால மன்னர்களை உருவாக்கும் இந்த புகழ்பெற்ற ஐசிசி உலக கோப்பை 14வது முறையாக இந்த ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று இந்த உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக விளங்கும் இந்தியா லீக் சுற்றில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த தொடரில் இளம் வீரர் “யாஷ் துள்” தலைமையில் தனது முதல் லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

u 19

- Advertisement -

6 முக்கிய வீரர்கள் விலகல்:
இதை அடுத்து இந்த உலக கோப்பையில் இந்தியா தனது 2-வது போட்டியில் அயர்லாந்து அணியை நேற்று சந்தித்தது ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த போட்டிக்கு முன் இந்தியாவின் கேப்டன் யாஷ் துள், துணை கேப்டன் ரசித் உள்ளிட்ட 6 முக்கிய வீரர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

u 19 3

இந்தியா அபார பேட்டிங்:
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச தீர்மானித்ததை அடுத்து களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்கள் அங்க்ரிஸ் ரகுவன்ஷி 79 ரன்களும் மற்றும் ஹர்னூர் சிங் 88 ரன்களும் குவித்து முதல் விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தார்கள்.

- Advertisement -

அடுத்துவந்த ராஜ் பாவா 46 ரன்களும், கேப்டனாக பொறுப்பு வகித்த சித்து 36 ரன்களும் ராஜ்வர்தன் வெறும் 17 பந்துகளில் 39* ரன்கள் என பேட்டிங் செய்த அனைவரும் பொறுப்புடன் விளையாடி பெரிய ரன்களை குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 307/5 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக முசாமில் செர்ஷாத் 3 விக்கெட்கள் செய்தார்.

u 19 2

மிரட்டல் பவுலிங்:
இதை தொடர்ந்து 308 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்தை ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்துவீசி கதிகலங்க செய்தார்கள். இந்தியாவின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அயர்லாந்து டாப் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் 17/3 என அந்த அணி ஆரம்பத்திலேயே நிலைகுலைந்தது.

- Advertisement -

இந்த சரிவில் இருந்து கடைசி வரை மீளமுடியாத அயர்லாந்து 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணிக்கு ஸ்கார்ட் மேக்பத் 32 ரன்கள் எடுத்தார்.

u-19

இந்தியா வெற்றி :
இந்தியா சார்பில் அநீஸ்வர் கவுதம், கர்வ் சங்வான், கௌசல் தாம்பே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதன் வாயிலாக 174 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இந்த உலக கோப்பையில் 2-வது லீக் போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் சுமாரான வீரர்களை வைத்துக்கொண்டே இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதையும் படிங்க : இந்திய அணியில் இவர் ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன். என்ன அட்டகாசமாக ஆடுகிறார் – சஞ்சய் மஞ்சரேக்கர் புகழாரம்

காலிறுதிக்கு தகுதி:
இந்த 2 வெற்றிகள் வாயிலாக குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளை பெற்ற இந்தியா இந்த உலக கோப்பையின் சூப்பர் லீக் சுற்று எனப்படும் கால் இறுதிச்சுற்றுக்கு முன்கூட்டியே தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த உலக கோப்பையின் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் உகாண்டா அணியை வரும் ஜனவரி 22ஆம் தேதி இந்தியா சந்திக்க உள்ளது.

Advertisement