இந்திய அணியில் இவர் ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன். என்ன அட்டகாசமாக ஆடுகிறார் – சஞ்சய் மஞ்சரேக்கர் புகழாரம்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது 296 ரன்கள் குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 265 ரன்கள் மட்டுமே குவிக்க 31 ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராகுல் தலைமையிலான இந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Rahul-toss

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்த இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுலுடன் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 10 பவுண்டரிகளுடன் 84 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 6 மாதங்கள் ஆன பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிக்கு கம்பேக் கொடுத்துள்ள தவான் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதன்காரணமாக அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் அவரது இடத்தை உறுதி செய்துள்ளார். ஏனெனில் அவரது இந்த சிறப்பான அடம் அடுத்து வரும் போட்டிகளிலும் அவரது இடத்தினை உறுதி செய்துலர்த்து. இந்நிலையில் தற்போது 36 வயதான ஷிகர் தவானின் இந்த ஆட்டத்தை புகழ்ந்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் : எப்போதுமே நான் ஷிகார் தவானின் மிகப்பெரிய ரசிகன்.

dhawan

இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் அவர் ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன். இந்த 3-4 ஆண்டுகளில் அவரது கிரிக்கெட் கரியர் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொறுத்தவரை இந்த முதல் போட்டியில் அவருடைய இன்னிங்ஸ் அற்புதமான அதிலும் ஒன்று. குறிப்பாக யான்சென்க்கு எதிராக அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 – 3 வருடமாய் தள்ளாடும் இந்திய பேட்டிங், வாங்கும் சம்பளத்துக்கு அவர் என்ன செய்கிறார்? – முன்னாள் வீரர் கேள்வி

அதே போன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்னைப் பொறுத்தவரை அடுத்த உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டிய ஒரு வீரர் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement