2 – 3 வருடமாய் தள்ளாடும் இந்திய பேட்டிங், வாங்கும் சம்பளத்துக்கு அவர் என்ன செய்கிறார்? – முன்னாள் வீரர் கேள்வி

Vikram
- Advertisement -

கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. கடைசி முறையாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய விராட் கோலி தலைமையில் உலகத்தரம் வாய்ந்த தரமான வீரர்களுடன் இந்த தொடரில் விளையாடிய இந்தியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் மண்ணைக் கவ்வி தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தரமான இந்தியாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

Petersen

- Advertisement -

மோசமான பேட்டிங் :
இந்த தொடரில் இந்தியாவின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்த போதிலும் மோசமான பேட்டிங் காரணமாக இந்தியா படுதோல்வி அடைந்தது என பலராலும் கருதப்படுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டர் வரிசையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஒரு சதங்களை கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வரும் கேப்டன் விராட் கோலி, செடேஸ்வார் புஜரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் இந்த தொடரில் மீண்டும் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

பேட்டிங் கோச் என்ன செய்கிறார்:
இந்நிலையில் கடந்த 2 – 3 வருடங்களாக இந்த அனுபவ வீரர்கள் ரன்களை அடிக்க முடியாமல் திணறும் போது அவர்களின் பேட்டிங்கை முன்னேற்றம் செய்யாமல் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் வீடியோவில் அவர்,

“இந்தியாவின் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக உருவாகியுள்ளதற்கு விராட் கோலி அல்லது ரவி சாஸ்திரி அல்லது பரத் அருண் ஆகியோருக்கு க்ரெடிட் கொடுக்கிறோம். அனைவரும் இந்தியாவின் பவுலிங் மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளதாக பாராட்டுகிறோம். ஆனால் பேட்டிங் இந்த அளவு மோசமானதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? கடந்த 2 – 3 வருடங்களாக புஜாரா, ரகானே, கோலி ஆகியோர் பேட்டிங்கில் மோசமாக செயல்படும்போது பேட்டிங் கோச் என்ன செய்துகொண்டிருக்கிறார்?”

- Advertisement -

என நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுவது போல கடந்த 2 வருடங்களாக விராட் கோலி, ரகானே போன்ற முக்கிய வீரர்கள் ரன்கள் அடிக்க முடியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளரால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டது போல் தோன்றவில்லை.

rathore

விக்ரம் ரத்தோர் :
இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் உள்ளார். ஆனால் அவர் தலைமையில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் பேட்டிங் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதே உண்மையாகும்.

- Advertisement -

இது பற்றி மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா,
“இந்த மோசமான செயல்பாடுகளுக்கு பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தவறு நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அணியில் விக்ரம் ரத்தோர் நீண்டகாலமாக இருந்து வருகிறார். எனவே அவர் தனது வேலையை சரியாக செய்கிறாரா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்”
என இது பற்றி மேலும் கூறினார்.

rathore 1

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்ட போது பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் 2021ஆம் ஆண்டு ரவிசாஸ்திரி பதவியிலிருந்து விலகிய போது கூட இவர் இன்னும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நீடிக்கிறார்.

இதையும் படிங்க : இவரோட பேட்டிங் தான் இந்திய அணியை வீழ்த்தியதற்கு காரணம் – வெற்றி குறித்து தெம்பா பவுமா பேட்டி

இப்படி நீண்ட காலமாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார் என பிசிசிஐ ஆராய்ந்து பார்க்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement