இவரோட பேட்டிங் தான் இந்திய அணியை வீழ்த்தியதற்கு காரணம் – வெற்றி குறித்து தெம்பா பவுமா பேட்டி

RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது அந்த அணியின் கேப்டன் பவுமா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வேண்டர்டுசைன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக 4-வது விக்கெட்டுக்கு அந்த அணி 204 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இறுதியில் பவுமா 110 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வேண்டர்டுசைன் 96 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் என 129 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது.

பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 265 ரன்களை மட்டுமே குவிக்க 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில் : இந்த போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்துள்ளது.

vanderdussen

இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய சற்று சிரமப்பட்டாலும், வேண்டர்டுசைன் வேறு ஒரு மைதானத்தில் விளையாடுவது போல அவ்வளவு எளிதாக பந்துகளை அடித்து விளையாடினார். அவருடன் அமைத்த இந்த பார்ட்னர்ஷிப் தான் இந்த போட்டியின் முடிவை மாற்றியது எனக் கூறலாம். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் தான் இந்திய அணியை வீழ்த்தியது. அதேபோன்று யான்சன் அறிமுகம் சிறப்பாக அமைந்தது. புதிய பந்தில் அவர் நன்றாக ஸ்விங் செய்கிறார். அவரது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்கள் செய்த இந்த தவறு காரணமாகவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் – கே.எல் ராகுல் வருத்தம்

அதே போன்று எப்போதும் மார்க்கம் எங்களது அணியின் பந்து வீச்சிலும் கை கொடுக்கிறார் ஒரு அணிக்கு இவர் போன்ற ஒரு வீரர் நிச்சயம் அவசியம். மேலும் ஒட்டுமொத்தமாகவே எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இந்திய அணியை வீழ்த்தினோம் என பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement