இதனால தான் ரிங்கு செலக்ட்டாகல.. 2024 டி20 உ.கோ ஃபைனலில் மோதப்போகும் 2 அணிகள் இது தான்.. கங்குலி பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து நடராஜன் போன்ற ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

குறிப்பாக அர்ஷிதீப் சிங், முகம்மது சிராஜ் ஆகியோரை விட ஐபிஎல் 2024 தொடரில் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை குறைந்த எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார். இருப்பினும் அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்காத தேர்வுக் குழு ரிங்கு சிங்கை முதன்மை அணியில் தேர்வு செய்யாததற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஃபைனல் அணிகள்:
ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார். அதனாலேயே எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை தேர்ந்தெடுப்பதற்காக ரிங்குவை தேர்வுக் குழுவினர் கழற்றி விட்டிருக்கலாம் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 போலவே 2024 உலகக் கோப்பை ஃபைனலிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கங்குலி கணித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த தொடரின் சிறந்த 2 அணிகள். அவர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளிலும் அதையே செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருமே மேட்ச் வின்னர்கள். அந்த 15 பேரும் தேர்வு செய்யப்படுவதற்கு போதுமான தகுதியுடையவர்கள்”

இதையும் படிங்க: ஒரே சேன்ஸ் தான் குடுத்தேன்.. மும்பை அணியை முடிச்சி விட்டுட்டாரு.. சீனியர் வீரரை பாராட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்

“டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது வெஸ்ட் இண்டீஸ். அங்குள்ள பிட்ச்கள் கொஞ்சம் ஸ்லோவாக சுழலலுக்கு சாதகமாக இருக்கும். எனவே தேர்வுக் குழுவினர் மற்றொரு ஸ்பின்னரை விரும்புகின்றனர். ஒருவேளை அதனாலேயே ரிங்கு சிங் வாய்ப்பு பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் இது ரிங்குவின் ஆரம்பம் மட்டுமே” என்று கூறினார். வருங்காலங்களில் ரிங்குவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement