டி20 உலககோப்பையில் விளையாட இருப்பதன் மூலம் ரோஹித் சர்மா படைக்கவுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரானது வரும் மே 26-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள வேளையில் அடுத்ததாக ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா மாற்று நமீபியா என 20 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

- Advertisement -

அதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் போட்டி நடைபெற்று அதன் பின்னர் அடுத்த சுற்றுக்கு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அதன்படி நடைபெற உள்ள இந்த தொடருக்கான டி20 இந்திய அணியை ஏப்ரல் 30-ஆம் தேதி இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அணியில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா விளையாட இருப்பதன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் டி20 உலக கோப்பை போட்டிகளில் இதுவரை நடைபெற்ற 9 தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்த உள்ளார்.

இதையும் படிங்க : 221 ரன்ஸ்.. மிரட்டிய டெல்லியின் புதிய ஓப்பனிங் ஜோடி.. சேவாக்கிற்கு அஸ்வின் பதிலடி.. சஹால் வரலாற்று சாதனை

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரானது அறிமுகமானபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக அனைத்து டி20 உலக கோப்பை தொடர்களிலும் விளையாடியுள்ள ஒரே வீரர் என்ற பெருமையை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement