221 ரன்ஸ்.. மிரட்டிய டெல்லியின் புதிய ஓப்பனிங் ஜோடி.. சேவாக்கிற்கு அஸ்வின் பதிலடி.. சஹால் வரலாற்று சாதனை

DC vs RR
- Advertisement -

தலைநகர் டெல்லியில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 56வது போட்டி மே 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லியில் அணிக்கு அபிஷேக் போரல் மற்றும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆகிய இளம் வீரர்கள் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கி வெளுத்து வாங்கினார்கள்.

குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடிய ஜேக் 7 பவுண்டரி 3 சிக்சருடன் வெறும் 19 பந்துகளில் அரை சதமடித்து 50 ரன்கள் குவித்த போது அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சாய் ஹோப் 1 (1) ரன்னில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் அதற்கடுத்ததாக வந்த அக்சர் பட்டேல் 15 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி அபிஷேக் போரல் 28 அரை சதமடித்தார்.

- Advertisement -

அசத்திய அஸ்வின்:
அதே வேகத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (36) ரன்கள் குவித்த போது அஸ்வின் சுழலில் அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் களமிறங்கியிருந்த கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடி 15 (15) ரன்கள் எடுத்திருந்த போது சஹால் சுழலில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையும் சேர்த்து சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 41 (20) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் குல்பதின் நைப் 19, ரசிக் சலாம் 9, குல்தீப் யாதவ் 5* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 20 ஓவரில் டெல்லி 221/8 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் பெரிய விக்கெட்டுகள் எடுக்காததால் அடுத்த ஐபிஎல் தொடரில் உங்களை யாருமே வாங்க மாட்டார்கள் என்று அவரை சேவாக் விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: டி20 உ.கோ தொடரில் விராட் கோலிக்கு பதிலாக.. இவரை 3வது இடத்தில் இறக்கலாம்.. லாரா யோசனை

அதற்கு பதிலடியாக சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து இப்போதும் தாம் சோடை போகவில்லை என்பதை நிரூபித்தார். இதைத் தொடர்ந்து 222 ரன்களை ராஜஸ்தான் சேசிங் செய்து வருகிறது. குறிப்பாக புள்ளிப்பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அந்த அணி இப்போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

Advertisement