டி20 உ.கோ தொடரில் விராட் கோலிக்கு பதிலாக.. இவரை 3வது இடத்தில் இறக்கலாம்.. லாரா யோசனை

Brian Lara 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி காணப்பட்டது.

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் உங்களில் உள்ள பிட்ச்கள் கொஞ்சம் மெதுவாக இருக்கும். மறுபுறம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடக் கூடியவர். எனவே அவருடைய அணுகுமுறை அங்கு பொருந்தாது என்று தேர்வுக்குழு கருதுவதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய அனுபவத்தை கொண்டிருப்பதன் காரணமாக விராட் கோலி மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

லாராவின் யோசனை:
அதனால் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பின் விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தம்மை பொறுத்த வரை சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூரியகுமார் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும் போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாக சொல்வார்”

- Advertisement -

“சூரியகுமார் விஷயத்திலும் நான் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 – 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க டி20 உலகக் கோப்பையில் அவர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துடுவாரு.. கிளார்க் நம்பிக்கை

“அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். எனவே அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியை கண்டறியுங்கள்” என்று கூறினார். முன்னதாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறும் அளவுக்கு சூரியகுமார் 4வது இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் விராட் கோலி 15 வருடங்களாக மூன்றாவது இடத்தில் அசத்தி வருகிறார். எனவே அந்த இடங்களில் இந்திய அணி நிர்வாகம் மாற்றம் செய்யாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement