IND vs WI : என்னை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடருக்கான தொடர்நாயகன் விருது இவருக்குத்தான் – ஜாஹீர் கான் கருத்து

Zaheer-Khan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

IND vs WI Rohit Sharma

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அடுத்ததாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவானதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான வெற்றி கோப்பையும், காசோலையும் வழங்கப்பட்டது. அதேபோன்று இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை முகமது சிராஜ் வென்றிருந்தார். ஆனால் தொடர்நாயகன் விருது வழங்கப்படாமலே போனது.

Ashwin

இந்நிலையில் என்னை பொறுத்தவரை இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது அஷ்வினுக்கு தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஜாஹீர் கான் கூறுகையில் : இந்த தொடரின் போது முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் மொத்தமாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

அதோடு பந்துவீச்சில் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு இணையாக அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் முக்கியமான அரைசதம் ஒன்றையும் அடித்துள்ளார். எனவே என்னை பொறுத்தவரை இந்த தொடர் நாயகன் விருது அஷ்வினுக்கு தான் என ஜாஹீர் கான் தெரிவித்தார்.

இதையும் படிங்க : IND vs WI : டெஸ்ட் தொடருக்கான தொடர்நாயகன் விருதே வழங்கப்படவில்லை இதை கவனிச்சீங்களா? – ஏன் தெரியுமா?

ஜாஹீர் கான் கூறியது போலவே : இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட் என மொத்தம் 15 விக்கெட்களையும், பேட்டிங்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 78 பந்துகளில் 56 ரன்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement