இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் நடைபெறாமல் டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் வெற்றிக்கான கோப்பையும், காசோலையும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் குறித்த விருது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இப்படி இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது ஏன் அறிவிக்கப்படவில்லை? என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இவ்வேளையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வீரர்களுக்கான ஊதியத்தினை கொடுப்பதிலேயே பெரும் தட்டுப்பாடு நிலவு வரும் வேளையில் நிதி நிலைமையின் காரணமாகவே அவர்கள் இந்து தொடருக்கான தொடர் நாயகன் விருதினை அறிவிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க : அந்த ஹெல்ப் கிடைச்சா யார் தான் அடிக்க மாட்டா? இங்கிலாந்தை விட எப்போவும் இந்தியா தான் பெஸ்ட் – இஷான் கிசான் பேட்டி
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பார்க்கப்படும் பிசிசிஐ தொட்டதற்கெல்லாம் பரிசுகளை வழங்கி வரும் வேளையில் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் இப்படி ஒரு விருதை வழங்க முடியாத நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.