அந்த ஹெல்ப் கிடைச்சா யார் தான் அடிக்க மாட்டா? இங்கிலாந்தை விட எப்போவும் இந்தியா தான் பெஸ்ட் – இஷான் கிசான் பேட்டி

Ishan Kishan 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. டாமினிக்கா நகரில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 365 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 76/2 என தடுமாறியதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு சூழல் உருவானாலும் மழை வந்து தடுத்தது.

முன்னதாக அந்தப் போட்டியில் 183 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா இப்படி மழை வரும் என்பதை தெரிந்து வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிரடியாக செயல்பட்டு 181/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 57 (44) ரன்களும் ஜெய்ஸ்வால் 38 (30) ரன்களும் அதிரடியாக எடுத்ததால் 12.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் கடந்த இந்தியா 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முதல் 100 ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையை படைத்தது.

- Advertisement -

இங்கிலாந்தை விட பெஸ்ட்:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் ரேட்டில் (7.54) ஒரு இன்னிங்ஸில் ரன்களை குவித்த அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை விட இந்தியா சரவெடியாக விளையாடுவதாக பாராட்டினர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசியமில்லை என அந்த இன்னிங்ஸில் 52* (34) ரன்கள் எடுத்த இஷான் கிசான் கூறியுள்ளார்.

மேலும் பெரும்பாலான போட்டிகளில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியா விளையாடும் நிலையில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்கள் கிடைப்பதாலே இங்கிலாந்து அதிரடியாக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மழையை கருத்தில் கொண்டு செயல்பட்டது போல பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளுக்கேற்றார் போல் விளையாடும் இந்தியாவின் அணுகுமுறை தான் இங்கிலாந்தை விட சிறப்பானது என்று கூறும் அவர் இது பற்றி 2வது போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அது சூழ்நிலையை பொருத்ததாக இருக்க வேண்டும். அதை விட ஒருவர் அதிரடியாக விளையாடுவதை பிட்ச் தான் தீர்மானிக்கிறது. ஆனால் நாங்கள் எப்போதுமே சுழல் மற்றும் பவுன்ஸ் இருக்கும் ஆடுகளங்களிலேயே அதிகமாக விளையாடுகிறோம். எனவே அதில் அதிரடியாக விளையாடுவது மிகவும் கடினமாகும்”

“அதனால் அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாடாமல் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை படித்து அதற்கேற்றார் போல் விளையாடுவது அவசியமாகும். அதே சமயம் ஒருவேளை விக்கெட் விழுந்தாலும் அந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் அதில் இந்திய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் அபாரமாக செயல்பட முடியும்”

- Advertisement -

“குறிப்பாக பல்வேறு வகையான கிரிக்கெட்டில் பல்வேறு வகையான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள எங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். அதாவது எந்த போட்டியில் எந்த வகையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். எனவே என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு முறையும் நாம் அதிரடியாக விளையாட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். மாறாக அது சூழ்நிலையை பொறுத்து அமைய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ தடை – மொத்தமாக வழங்கப்பட்ட தண்டனைகளின் லிஸ்ட் இதோ

இதை தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. ஜூலை 27இல் துவங்கும் அத்தொடரில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் போன்ற மேலும் சில நட்சத்திர வீரர்கள் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement