இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ தடை – மொத்தமாக வழங்கப்பட்ட தண்டனைகளின் லிஸ்ட் இதோ

- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலில் நடைபெற்ற போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அந்த நிலைமையில் ஜூலை 22ஆம் தேதி தாக்காவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை வழக்கம் போல சொதப்பிய இந்தியா கோட்டை விட்டு சமன் செய்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை விட அப்போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நடந்து கொண்ட விதம் இந்திய ரசிகர்களிலேயே கடுப்பாக வைத்தது.

முதலில் வங்கதேசம் நிர்ணயித்த 226 ரன்களை துரத்தும் போது முக்கியமான நேரத்தில் களமிறங்கிய அவர் 14 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து தம்முடைய காலில் படாமல் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தும் களத்தில் இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த உள்ளூர் அம்பயர் அந்த அணிக்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் நடந்து எதிராகவும் நடந்து கொண்டதாக கோபமடைந்த அவர் ஸ்டம்ப்பின் மீது பேட்டால் அடித்து சேதப்படுத்தி திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
அத்துடன் நிற்காத அவர் போட்டியின் முடிவில் “அடுத்த முறை வங்கதேசத்திற்கு வரும் போது அம்பயர்களுக்கு எதிராகவும் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்” என்று வெளிப்படையாக விமர்சித்தார். அவை அனைத்தையும் விட பகிர்ந்து கொடுக்கப்பட்ட கோப்பையை வாங்குவதற்காக அருகில் வந்த வங்கதேச கேப்டன் சுல்தானாவிடம் “அம்பயர்கள் இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே அவர்களையும் போட்டோ எடுப்பதற்கு இங்கே அழைத்து வாருங்கள்” என்று அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியது இந்திய ரசிகர்களையே அதிருப்தியடைய வைத்தது.

அதனால் ஏமாற்றமடைந்த வங்கதேச கேப்டன் தம்முடைய அணி வீராங்கனைகளை அழைத்துக் கொண்டு பெவிலியன் திரும்பினார். மொத்தத்தில் விதிமுறை மீறல்களை செய்து வங்கதேசத்தை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அவரை இந்திய ரசிகர்களும் மதன் லால் போன்ற சில முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த 2 சர்வதேச மகளிர் போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கௌர் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

1. மேலும் 34வது ஓவரில் அவுட்டான போது ஸ்டம்ப்களை அடித்து சேதப்படுத்தி அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து அவருக்கு 50% அபராதமும் 2 கேரியர் கருப்பு புள்ளிகளும் கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக லெவல் 2 விதிமுறை மீறியுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அத்துடன் பொதுவெளியில் நடுவர்களை வெளிப்படையாக விமர்சித்ததால் 2.8 விதிமுறையை மீறியுள்ள அவருக்கு போட்டியின் சம்பளத்திலிருந்து கூடுதலாக 25% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

பொதுவாக லெவல் 2 விதிமுறைகளை மீறும் போது 50 – 100% போட்டியின் சம்பளம் அபராதமாகவும் 4 கருப்பு புள்ளிகள் தண்டனையாகவும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஐசிசி லெவல் 1 விதிமுறையை மீறினால் அதிகபட்சமாக 50% அபராதமும் 1 – 2 கருப்பு புள்ளிகள் தண்டனையாக கொடுக்கப்படும் என கூறியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இந்திய கேப்டனுக்கு 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த 4 புள்ளிகள் 2 புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : யாருய்யா தூங்கிட்டு இருந்தவர எழுப்புனது? வைரலாகும் கேப்டன் ரோஹித்தின் ரியாக்சன் – சிரிக்கும் ரசிகர்கள்

அத்துடன் தடை என்பது 1 டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெளிவாக கூறியுள்ளது. அதாவது இந்தியா அடுத்ததாக 1 டெஸ்டில் விளையாடினால் அதில் ஹர்மன்ப்ரீத் விளையாட முடியாது. இல்லையெனில் ஒருநாள் அல்லது டி20 தொடரில் விளையாடினால் அதில் 2 போட்டிகளில் விளையாட முடியாது என்று ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement