யாருய்யா தூங்கிட்டு இருந்தவர எழுப்புனது? வைரலாகும் கேப்டன் ரோஹித்தின் ரியாக்சன் – சிரிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே நிறைய இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினர்.

குறிப்பாக டாமினிக்கா நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அறிமுக போட்டியிலேயே வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக சாதனை படைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து தன்னுடைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மற்றும் அதிகபட்ச ரன்கள் (229) பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி போன்ற வரலாற்றுச் சாதனைகளை ஜெய்ஸ்வால் உடன் இணைந்து படைத்தார்.

- Advertisement -

ரோஹித்தின் ரியாக்சன்:
மேலும் 2வது போட்டியிலும் 139 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்த அவர்கள் அதிவேகமாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற வரலாற்றையும் படைத்தனர். அத்துடன் உலகிலேயே அதிவேகமாக முதல் 100 ரன்களை குவித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைப்பதற்கு உதவிய அவர்களைப் போலவே விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார்.

அதன் காரணமாக 2வது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 365 என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 76/2 என தடுமாறிய போது மழை வந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. முன்னதாக இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு 300க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஃபெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா திடீரென ஜன்னல் கதவை திறந்து விட்டு என்ன நடக்கிறது என்பதை பார்த்தார்.

- Advertisement -

ஆனால் அதை அவர் பார்த்த விதம் தான் அனைத்து ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் ஏதோ நன்றாக தூங்கியவரை தூக்கத்திலிருந்து திடீரென தட்டி எழுப்பி விட்டது போல் என்ன நடக்கிறது என்று ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த அவருடைய தலை முடிகள் அனைத்தும் கலைந்திருந்தது. அதை விட “என்ன நடக்கிறது” என்று பார்க்கும் போது வாயை திறந்து கொண்டே அவர் கொடுத்த ரியாக்சனை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என்பதுடன் சிரிக்க வைப்பதாக அமைகிறது.

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள் வழக்கம் போல தங்களால் முடிந்த அனைத்து விதமான தலைப்புகளை போட்டு கலாய்த்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த தொடரின் முடிவில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : நீங்களும் அதே பழைய பஞ்சாங்கத்த ஃபாலோ பண்ணாதீங்க – அஜித் அகர்கருக்கு சுனில் கவாஸ்கர் வைக்கும் கோரிக்கை என்ன?

ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கும் அந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, சஹால், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் போன்ற டெஸ்ட் அணியில் இல்லாத மேலும் சில நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement