IND vs WI : நீங்களும் அதே பழைய பஞ்சாங்கத்த ஃபாலோ பண்ணாதீங்க – அஜித் அகர்கருக்கு சுனில் கவாஸ்கர் வைக்கும் கோரிக்கை என்ன?

Sunil Gavaskar Ajit Agarkar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமான நிலையில் மழை வந்து தடுத்தது. அதன் காரணமாக 2வது போட்டி ட்ராவில் முடிந்ததால் ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பை இழந்த இந்தியா 1 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

IND-vs-WI

- Advertisement -

அதற்கு தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது முதன்மை காரணமாக அமைந்த நிலையில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் என்று ரசிகர்கள் கொண்டாடும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமானது. மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் தோல்வியை சந்திப்பதற்கு ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

கவாஸ்கர் ஏமாற்றம்:
அதனால் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்குவது போலவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து துவங்கியுள்ள 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் ஓரிரு இளம் வீரர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு பெரும்பாலும் சீனியர்களே தேர்வு செய்யப்பட்டனர்.

Ajit-Agarkar

அதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் நிறைய சாதனைகளை படைத்த நிலையில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக இந்தியா தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பிருந்த தேர்வு குழுவினர் தோற்றாலும் வருங்காலத்தை பற்றி கவலைப்படாமல் சீனியர்களுக்கே வாய்ப்பு கொடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அந்த நிலையில் தற்போது புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜித் அகர்கர் சீனியர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றாமல் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த தொடரில் ரோகித் சர்மா போன்றவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சாதனைகள் படைக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Gavaskar

“தற்போது அஜித் அகர்கர் தேர்வு குழுவின் தலைவராக வந்துள்ளார். எனவே இப்போது அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை கட்டமைக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறாரா அல்லது அதே பழைய பஞ்சாங்கத்தை போன்ற பழைய கதையை பின்பற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். குறிப்பாக இந்திய அணியில் மணமகன் மட்டும் என்ற பழைய கதை இருக்கப் போகிறதா அல்லது மணமகளும் இருப்பாரா என்பதைப் பற்றி பார்ப்போம்”

இதையும் படிங்க:IND vs WI : இந்தியாவை சாய்க்க 2 வருடம் கழித்து சேர்க்கப்பட்ட நட்சத்திர வீரர் – ஒருநாள் தொடருக்கான அறிவிக்கப்பட்ட வெ.இ அணி இதோ

“ஏனெனில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோஹித் மற்றும் விராட் கோலி அடித்த ரன்களை பார்க்கும் போது கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளிலிருந்து என்ன பாடத்தை கற்றுள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் சீனியர்களுக்கு இளம் வீரர்கள் எந்த விதமான சவாலையும் கொடுப்பதை தேர்வு குழுவினர் விரும்பவில்லையா என்றும் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று பார்த்திருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement