இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் வரும் மே-26 ஆம் தேதி ஐபிஎல் தொடரானது நிறைவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அறிவித்துவிட்டது. அதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கும் இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித்தை ஓரம் கட்டிய மும்பை அணியின் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சியை பொறுப்பை தூக்கிக் கொடுத்தது.
இது ஒருபுறம் ரோகித் சர்மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த வேளையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பாண்டியாவின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் அவரை அணியில் சேர்க்கும் திட்டம் ரோகித் சர்மாவிடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு டி20 உலகக் கோப்பை தொடரில் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் தான் துணை கேப்டனாகவும் செயல்பட வேண்டும் என்றும் எண்ணி இருக்கிறார்.
ஆனால் அவற்றையெல்லாம் மீறி பிசிசிஐ ஹார்டிக் பாண்டியாவின் மீது நம்பிக்கை வைத்து அவரை துணைக்கோப்பனாகவும் அறிவித்தது. இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய பின்னர் ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இம்முறையும் பிளே ஆஃப் போகலன்னா.. ஆர்சிபி அணிக்கு அவரை புதிய கேப்டனா போடலாம்.. ஹர்பஜன் ஓப்பன்டாக்
மேலும் பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தத்தால்தான் பாண்டியா துணை கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ரோஹித் சர்மா நிச்சயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு அதிரடியாக ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.