இம்முறையும் பிளே ஆஃப் போகலன்னா.. ஆர்சிபி அணிக்கு அவரை புதிய கேப்டனா போடலாம்.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

Harbhajan Singh 6
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்காக போராடி வருகிறது. விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற டு பிளேஸிஸ் தலைமையில் 2022 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூரு கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த நிலையில் இந்த வருடம் ஆரம்ப முதலே தடுமாறிய அந்த அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவு செய்தது.

அதனால் ஒரு மாதமாக கடைசி இடத்தை வலுவாக பிடித்திருந்த பெங்களூரு கண்டிப்பாக முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் கொதித்தெழுந்த பெங்களூரு கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து கம்பேக் கொடுத்துள்ளது. அதனால் மும்பை போன்ற அணிகளை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

புதிய கேப்டன்:
அதனால் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற ஓரளவு நம்பிக்கையுடன் பெங்களூரு அணி காத்திருக்கிறது. இந்நிலையில் இம்முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் மீண்டும் விராட் கோலி போன்ற இந்திய வீரர் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனெனில் சிஎஸ்கே அணிக்கு தோனி போல இப்போதும் ஆர்சிபி அணியில் விராட் கோலி தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்வதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அவர்கள் ஒரு இந்திய வீரரை கேப்டனாக நியமிக்க பார்க்க வேண்டும்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் ஏன் விராட் கோலியை மீண்டும் அவர்கள் கேப்டனாக கொண்டுவரக் கூடாது. தோனி சென்னை அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதே போல விராட் கோலி பெரிய தலைவர். அவருக்கு ஆர்சிபி அணி எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது தெரியும். தற்போது அவர்கள் ஆக்ரோஷமான அதிரடியான ஆட்டத்தை விளையாடுகிறார்கள்”

இதையும் படிங்க: அதான் 400 கோடி சம்பாரிச்சுட்டீங்களே.. அப்றம் என்ன? பஞ்சாப் மாதிரி ஆகிடாதீங்க.. லக்னோ உரிமையாளரை விளாசிய சேவாக்

“அதைத் தான் விராட் கோலி பெங்களூரு அணியில் கொண்டு வருகிறார். எனவே வருங்காலங்களில் பெங்களூரு அணியை விராட் கோலி முன்னோக்கி தலைமை தாங்கி நடத்திச் செல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் பெங்களூரு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement