அதான் 400 கோடி சம்பாரிச்சுட்டீங்களே.. அப்றம் என்ன? பஞ்சாப் மாதிரி ஆகிடாதீங்க.. லக்னோ உரிமையாளரை விளாசிய சேவாக்

Virender Sehwag 22
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல். ராகுலை அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா திட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அந்த இலக்கை ஹைதராபாத் வெறும் 9.4 ஓவரில் சேசிங் செய்து முடித்தது.

அப்படிப்பட்ட பிட்ச்சில் 29 (33) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடிய கேஎல் ராகுல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தால். அதனால் ஹைதராபாத் அடித்து நொறுக்கிய அதே பிட்ச்சில் நீங்கள் இப்படி விளையாடலாமா? என்ற வகையில் லக்னோ அணியின் உரிமையாளர் ராகுலை பொதுவெளியில் திட்டாத குறையாக கோபத்துடன் பேசினார். அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படி செய்யலாமா என்று அவரை விமர்சித்தனர்.

- Advertisement -

400 கோடி லாபம்:
அத்துட்ஸ்ன் எதுவாக இருந்தாலும் மூடிய அறைக்குள் பேசலாமே என்று லக்னோ அணியின் உரிமையாளர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றாலும் வெல்லாவிட்டாலும் டிக்கெட் விற்பனையால் ஒவ்வொரு அணியும் 400 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் என்று வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

எனவே தொழிலதிபரான சஞ்சீவ் கோனேகா லக்னோ அணியால் லாபத்தை பார்த்த பின்பும் கிரிக்கெட்டை பற்றிய அடிப்படை தெரியாமல் ராகுலை திட்டியது சரியில்ல என்று சேவாக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உடைமாற்றும் அறை அல்லது செய்தியாளர்கள் சந்திப்பு போன்ற இடங்களில் தங்களுடைய வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பது போல் பேசுவது மட்டுமே உரிமையாளரின் வேலையாகும்”

- Advertisement -

“ஆனால் அதை விட்டுவிட்டு அணியின் உரிமையாளர் களத்திற்கு வந்து என்ன நடக்கிறது? என்ன பிரச்சனை? மீட்டிங் போடுங்கள் யார் மீது தவறு என்பதை பற்றி பேசுவோம் என்று சொல்வது சரியல்ல. பொதுவாக பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் தான் அணியை நடத்துவார்கள். எனவே உரிமையாளர்கள் வீரர்களிடம் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். இவர்களெல்லாம் தொழிலதிபர்கள். அவர்களுக்கு லாபம் மற்றும் நஷ்டம் மட்டுமே தெரியும்”

இதையும் படிங்க: தெ.ஆ போல குஜராத்துக்கு முதல் முறையாக நேர்ந்த சோகம்.. மழையால் கொல்கத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

“ஆனால் இங்கே உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லாத போது ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் இங்கே 400 கோடி லாபத்தை சம்பாதிக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்பதை தாண்டி நீங்கள் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள். அதனால் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பது மட்டுமே உங்களுடைய வேலையாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் இப்படி பேசினால் வேறு அணிக்கு சென்றால் நம்மை யாராவது வாங்குவார்கள் என்று தான் அந்த வீரர் நினைப்பார். அப்படி நீங்கள் நல்ல வீரரை இழப்பது உங்கள் வெற்றி வாய்ப்பை குறைக்கும். நான் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிய போது 5வது இடத்திலிருந்த அவர்கள் அதன் பின் அந்த இடத்தை பிடிக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement