தெ.ஆ போல குஜராத்துக்கு முதல் முறையாக நேர்ந்த சோகம்.. மழையால் கொல்கத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

GT vs KKR
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு 63வது லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் 8வது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

ஆனால் அப்போட்டி துவங்குவதற்கு முன்பாக குறுக்கே வந்த மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் பெய்த மழை அகமதாபாத் மைதானத்தை முழுவதுமாக தண்ணீரால் நிரப்பியது. அதனால் காத்திருந்த நடுவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஓவர்களைக் கொண்ட போட்டி நடத்துவதற்கு இரவு 10.56 மணிக்குள் மழை நிற்க வேண்டும் என்று அறிவித்தனர்.

- Advertisement -

குறுக்கே வந்த மழை:
அப்போதும் செவி சாய்க்காமல் தொடர்ந்து பெய்த மழை 10.30 மணி வரை விட்டு விட்டு பெய்தது. அதன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி சமமாக பிரித்து வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து குஜராத் அணி 13 போட்டிகளில் 11 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

அதனால் கடைசி போட்டியில் வென்றாலும் அந்த அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். எனவே ஐபிஎல் 2024 தொடரிலிருந்து மூன்றாவது அணியாக குஜராத் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. ஒருவேளை மழை குறுக்கே வராமல் இப்போட்டியில் வென்றிருந்தால் குஜராத் பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் நீடித்திருக்கும். அந்த வகையில் சொந்த மண்ணில் மழை குறுக்கே வந்ததால் குஜராத் அணி பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

குறிப்பாக உலகக் கோப்பைகளில் முக்கிய நேரங்களில் தென்னாபிரிக்க அணியின் வெற்றியை மழை வந்து தடுத்தது போல் இம்முறை குஜராத்தின் பிளே ஆஃப் கனவை மழை உடைத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி முதல் வருடத்திலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்று கடந்த வருடம் ஃபைனல் வரை சென்று அசத்தியது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா 50 வயசு வரைக்கும் விளையாடனும்.. காரணம் இது தான்.. பிசிசிஐக்கு யோக்ராஜ் கோரிக்கை

இருப்பினும் இம்முறை மும்பை அணிக்கு பாண்டியா சென்றதால் அனுபவமில்லாத சுப்மன் கில் தலைமையில் முடிந்தளவுக்கு போராடிய குஜராத் தங்களுடைய கேரியரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது. மறுபுறம் இப்போட்டியில் கிடைத்த ஒரு புள்ளியையும் சேர்த்து கொல்கத்தா 19 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் தங்களுடைய கடைசி போட்டியில் தோற்றாலும் டாப் 2 பிடித்து குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு இப்போதே கொல்கத்தாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement