எல்லாரும் குறைச்சு மதிப்பிடும் அந்த டீம் தான்.. 2023 உ.கோ கருப்பு குதிரையா இருப்பாங்க.. ஜஹீர் பேட்டி

Zaheer Khan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று முதன்மையான லீக் சுற்று போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிறைய முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

அதே போல அதிரடியாக விளையாடக்கூடிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள வெற்றிகரமான ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் இத்தொடரில் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக கணிப்புகள் காணப்படுகின்றன. மேலும் உலகின் சிறந்த பவுலிங் அட்டக்கை கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பை என்றாலே இந்தியா போன்ற அணிகளை தெறிக்க விடக்கூடிய நியூசிலாந்தும் இத்தொடரில் கருப்பு குதிரை அணிகளாக இருக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

உண்மையான கருப்பு குதிரை:
இந்நிலையில் காலம் காலமாக உலகக் கோப்பையில் அதிர்ஷ்டம் இல்லாமல் முக்கிய நேரங்களில் சொதப்புவதால் சோக்கர் என்ற பட்டத்தை சுமந்து வரும் தென்னாப்பிரிக்கா தான் தம்மை பொறுத்த வரை இத்தொடரில் உண்மையான கருப்பு குதிரை அணியாக இருக்கும் என்று இந்திய ஜாம்பவான் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். குறிப்பாக பலரால் குறைத்து மதிப்பிடப்படும் அந்த அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததை சுட்டிக்காட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அனைவரும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா கருப்பு குதிரையாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். அதே சமயம் ஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்காவின் வரலாறு அந்தளவுக்கு சிறப்பாக இல்லை என்பதை அறிவோம்”

- Advertisement -

“அதே காரணத்தால் அவர்களுக்கு சோக்கர் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில்ஏதோ ஒரு வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் அதிரடியாக விளையாடிய விதத்தால் நிச்சயம் இம்முறை கருப்பு குதிரையாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக அவர்களுடைய அணியில் இருக்கும் சில வீரர்கள் இந்திய சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் தென்னாப்பிரிக்கா இத்தொடரில் கோப்பையை வெல்லும் சக்தியாக இருக்கும்”

இதையும் படிங்க: உலகக்கோப்பை போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? மொபைல் மூலம் எவ்வாறு பார்க்கலாம் – ஒளிபரப்பு விவரம் இதோ

“மேலும் தற்போதைய உலகக்கோப்பை ஃபார்மெட்டில் நீங்கள் டாப் 4 இடத்தை தொட்டுவிட்டால் அதன் பின் கோப்பையை முத்தமிடுவதற்கு அடுத்த 2 நாட்கள் சிறப்பாக விளையாடினால் மட்டும் போதும். அது போன்ற சூழ்நிலைகளில் எந்த அணியும் யாரை வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம். எனவே ஒவ்வொரு அணியும் லீக் சுற்றை எப்படி அணுகி தங்களுடைய வெற்றி பாதையை உருவாக்குகிறார்கள் என்பது முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement