உலகக்கோப்பை போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? மொபைல் மூலம் எவ்வாறு பார்க்கலாம் – ஒளிபரப்பு விவரம் இதோ

Worldcup
- Advertisement -

அக்டோபர் 5-ஆம் தேதி நாளை ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக துவங்க உள்ளது. மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 45 லீக் போட்டிகளும் 3 நாக்கவுட் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. நாளைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

அதோடு இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய பத்து அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள 10 குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் நரேந்திர மோடி ஸ்டேடியம் – அகமதாபாத், சின்னசாமி ஸ்டேடியம் – பெங்களூர், எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் – சென்னை, அருண் ஜெட்லி ஸ்டேடியம் – டெல்லி, இமாச்சலப் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் – தர்மசாலா.

ஈடன் கார்டன் ஸ்டேடியம் – கொல்கத்தா, அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியம் – லக்னோ, வான்கடே ஸ்டேடியம் – மும்பை, எம்.சி.ஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியம் – புனே, ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம் – ஹைதராபாத் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளும் தொலைக்காட்சிகளில் எப்படி பார்க்கலாம்? ஆன்லைன் மூலம் மொபைல் போனில் எப்படி பார்க்கலாம்? என்பது குறித்து தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம். அந்த வகையில் : இந்த உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க : இப்பல்லாம் ஸ்டீவ் ஸ்மித் அவோரோட பேட்டை யூஸ் பண்ணி தான் விளையாடுறாரு.. பின்னணியை பகிர்ந்த டிகே

அதன் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் போட்டிகளை நேரலையில் கண்டு களிக்கலாம். அதோடு இந்த போட்டிகளானது பல்வேறு மொழிகளில் வர்ணனை செய்யப்படவும் இருக்கிறது. அதேபோன்று மொபைல் மூலம் உலக கோப்பை போட்டிகளை காண விரும்புவோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement