இப்பல்லாம் ஸ்டீவ் ஸ்மித் அவோரோட பேட்டை யூஸ் பண்ணி தான் விளையாடுறாரு.. பின்னணியை பகிர்ந்த டிகே

Dinesh karthik 2
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் உலக அரங்கில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக சுழல் பந்து வீச்சாளராக தம்முடைய கேரியரை துவங்கிய அவர் நாளடைவில் பேட்ஸ்மேனாக மாறி இந்தியா போன்ற அனைத்து உலக அணிகளுக்கும் எதிராகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பேட்டிங் துறையின் முதுகெலும்பு வீரராகவும் மேட்ச் வின்னராகவும் செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, கேன் வில்லியம்சன் போன்றவர்களை மிஞ்சும் அளவுக்கு 58.6 என்ற அபாரமான சராசரியை கொண்டுள்ள அவர் 2015 உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற ஆஸ்திரேலியாவின் பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்நிலையில் சமீப காலங்களாகவே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பரிசாக கொடுத்த பேட்டை முக்கிய போட்டிகளில் பயன்படுத்தி ஸ்டீவ் ஸ்மித் அசத்தி வருவதாக தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

நண்பனின் பேட்:
குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் கோலியின் பேட்டை அவர் பயன்படுத்தியதை நேரில் பார்த்து உறுதி செய்ததாக தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஸ்டீவ் ஸ்மித்தை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பேட்டை கையில் வாங்கி பார்த்த நான் அடியில் “விராட் கோலி” என்று எழுதியிருப்பதை கவனித்தேன்”

“அப்போது இது உங்களுக்கு விராட் கோலி கொடுத்ததா? என்று அவரிடம் நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். அந்த வகையில் இப்போதெல்லாம் நிறைய போட்டிகளில் அவர் விராட் கோலி கொடுத்த பேட்டை பயன்படுத்தி விளையாடுகிறார். அத்துடன் ஆஷஸ் தொடருக்கு முன்பாக விராட் கோலி இன்னொரு பேட்டை அனுப்புவதற்காக காத்திருப்பதாகவும் ஸ்மித் என்னிடம் தெரிவித்தார்”

- Advertisement -

“அந்த வகையில் தான் அந்த 2 மகத்தான வீரர்களின் நட்பு தற்போது நன்றாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக ஆரம்ப காலங்களில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடிக்கடி ஸ்லெட்ஜிங் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக 2015 வாக்கில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஸ்மித் கேட்ச் பிடித்த பின் இந்திய வீரர்களிடம் வம்பிழுக்காமல் வாயை மூடிக்கொண்டு செல்லுமாறு விராட் கோலி கொடுத்த பதிலடியை மறக்க முடியாது.

இதையும் படிங்க: பணத்துக்காக இப்படியா.. கொஞ்சமாவது சுய மரியாதை இருக்கா? ரமீஸ் ராஜாவை விமர்சித்த டேனிஷ் கனேரியா

இருப்பினும் நாளடைவில் முதிர்ச்சியால் நண்பர்களாக மாறிய அவர்களில் 2019 உலகக்கோப்பையில் ஸ்மித்தை பந்தை சேதுபடுத்தியதற்காக கிண்டலடிக்க கூடாது என இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விராட் கோலி கோபமாக கண்டித்ததையும் மறக்க முடியாது. அந்த வகையில் தற்போது தன்னுடைய நண்பராக மாறியுள்ள விராட் கோலியின் பேட்டை பயன்படுத்தி விளையாடி வருகிறார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement