பணத்துக்காக இப்படியா.. கொஞ்சமாவது சுய மரியாதை இருக்கா? ரமீஸ் ராஜாவை விமர்சித்த டேனிஷ் கனேரியா

Dainsh Kaneria
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று முதன்மை போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு சவாலை கொடுத்து சரித்திரம் படைப்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

சொல்லப்போனால் கடைசியாக 2016 டி20 உலக கோப்பையில் விளையாடியவர்கள் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக தற்போது இந்தியா வந்துள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எல்லை பிரச்சினை காரணமாக 2023 ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல முடியாது என்று இந்தியா வெளிப்படையாக அறிவித்தது. அதனால் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் அக்டோபரில் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையை நாங்கள் புறக்கணிப்போம் அப்போதைய பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதிரடியான அறிக்கை வெளியிட்டார்.

- Advertisement -

சுய மரியாதை வேணாமா:
அத்துடன் நாங்கள் பங்கேற்காத உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றால் அதை யார் பார்ப்பார் என்றும் அவர் ஏளனமாக பேசினார். இருப்பினும் அதன் பின் பாகிஸ்தானின் சுமாரான செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து யூடியூப் வருமானத்திற்காக இந்தியாவுக்கு சாதகமாக பேசத் துவங்கிய அவர் தற்போது 2023 உலக கோப்பையில் வர்ணனையாளராக செயல்படுவதற்காகவும் வந்துள்ளார்.

அதனால் உங்களுக்கா இப்படி ஒரு நிலைமை என்று இந்திய ரசிகர்கள் ஏற்கனவே கலாய்த்து தள்ளினார்கள். இந்நிலையில் ஆரம்பத்தில் அப்படி பேசிய நீங்கள் தற்போது சுயமரியாதையை மறந்து எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்கள் என்று ரமீஸ் ராஜாவை மற்றொரு முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் சாதகமாக இருந்து வரும் கனேரியா இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்கு எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தான் செல்லாது என்று ரமீஷ் ராஜா தெரிவித்தார். ஆனால் தற்போது அவரே இந்தியாவில் பணத்திற்காக வர்ணனை செய்து வருகிறார். இருப்பினும் ஆரம்பத்தில் தைரியமான கருத்துக்களை வெளியிட்ட நீங்கள் தொடர்ந்து அந்த வார்த்தைகளை கண்டிப்பாக பின்பற்றியிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இது சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டதாகும்”

இதையும் படிங்க: ஏசியன் கேம்ஸ் 2023 : 7 பேர் ஒற்றை இலக்கம்.. வெறும் 116 ரன்கள் வைத்து.. இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கன்

“அதனால் இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்று சொன்ன அவர் இங்கே வர்ணனை செய்யும் வேலையை தவிர்த்து இருக்க வேண்டும். மாறாக இப்படி யூடர்ன் போடக்கூடாது. மேலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படி ஆரத்தி எடுத்து வரவேற்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தின் பண்பாகும். அதே போல பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவை கொடுப்பதையும் பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement