ஏசியன் கேம்ஸ் 2023 : 7 பேர் ஒற்றை இலக்கம்.. வெறும் 116 ரன்கள் வைத்து.. இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கன்

AFG vs SL
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மகளிரணி தங்கப்பதக்கம் வென்ற நிலையில் ஆடவர் கிரிக்கெட்டில் ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி நேபாளை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் அக்டோபர் 4ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்ற 3வது காலிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர் அட்டல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த நூர் அலி ஜாட்ரான் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுக்க மற்றொரு துவக்க வீரர் முகமத் சேஷாத் 20 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்களில் ஷாஹிதுல்லா 23 (14) ரன்கள் அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஏனைய வீரர்கள் இலங்கையின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் வெற்றி:
அதன் காரணமாக 18.3 ஓவரிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக நுவான் துசாரா 4 விக்கெட்டுகளும் சஹான் அர்ச்சிங்கே 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 117 என்ற சுலபமான இலக்கை இலங்கை அசால்டாக எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க வீரர்கள் செவோன் டேனியல் 9, லசித் கிராஸ்புலே 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனால் அவர்களை விட மிடில் ஆர்டரில் கேப்டன் ஆர்சிங்கே 22, அசேன் பண்டாரா 13, விஜயகாந்த் வியாஸ்காந்த் 13* ரன்கள் எடுத்தது தவிர்த்து பெர்னாண்டோ 5, லகிரு உடாரா 0, ரவீந்தூ பெர்னாண்டோ 9, லஹிரு சமரகோன் 1, விமுக்தி 6, நுவான் துஷாரா 6 என எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக சுலபமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கையை 19.1 ஓவரில் வெறும் 108 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அந்தளவுக்கு குறைந்த இலக்கை வைத்தே பந்து வீச்சில் அசத்தி வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக காசித் அகமது மற்றும் குல்பதின் நைப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: வார்ம் அப் மேட்ச்லயே இவ்ளோ சூப்பரா ஆடுறாரு.. பாகிஸ்தான் வீரரை புகழ்ந்த – இர்பான் பதான்

அதன் காரணமாக இலங்கைக்கு பெரிய ஏமாற்றம் பரிசாக கிடைத்த நிலையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஆர்கானிஸ்தான் அக்டோபர் ஆம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தானுடன் மோத உள்ளது. அதே போல தற்போது நடைபெறும் வங்கதேசம் மற்றும் மலேசியா அணிகள் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement