வார்ம் அப் மேட்ச்லயே இவ்ளோ சூப்பரா ஆடுறாரு.. பாகிஸ்தான் வீரரை புகழ்ந்த – இர்பான் பதான்

Irfan-Pathan
- Advertisement -

இந்தியாவில் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை அக்டோபர் 5-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் 10 அணிகளும் தற்போது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதான பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 77 ரன்களையும், கேமரூன் கிரீன் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பாபர் அசாம் 90 ரன்களையும், முகமது நவாஸ் 50 ரன்களையும் குவித்தனர். நடைபெற்று வரும் இந்த பயிற்சி போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதன் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 80 ரன்கள் அடித்த பாபர் அசாம் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 59 பந்துகளில் 90 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள இர்பான் பதான் : இந்த உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவார் என்பது இந்த பயிற்சி போட்டிகளின் மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க : என்னோட பேட்டிங்ல பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் நான் அதை பண்றதே கிடையாது – ரோஹித் சர்மா கருத்து

பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் ஒரு பெரிய பிளஸ்ஸாக இருப்பார். அவர்களது அணியை பொறுத்தவரை துவக்க வீரர்கள் மட்டும்தான் சற்று கவலைக்குரிய விதத்தில் விளையாடி வருகின்றனர். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜோஷ் இங்கிலீஸ் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்க வேண்டிய ஒரு வீரர். மிட்சல் ஸ்டார்க் முக்கியமான கட்டங்களில் அற்புதமாக பந்துவீசி வருகிறார் என இர்பான் பதான் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement