என்னோட பேட்டிங்ல பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் நான் அதை பண்றதே கிடையாது – ரோஹித் சர்மா கருத்து

Rohit-Sharma
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 251 ஒருநாள் போட்டிகள், 148 டி20 போட்டிகள் மற்றும் 52 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 450 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதோடு எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியையும் கேப்டனாக வழிநடத்த காத்திருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அப்போதைய பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பந்துவீச்சாளராக இருந்தது தான் காரணம் என்று பல்வேறு பேச்சுக்கள் தற்போதும் நிலவி வருகிறது.

- Advertisement -

அதோடு தற்போதைய இந்திய அணியில் பந்துவீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்றும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கடந்த 2009-ஆம் ஆண்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரோகித் தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை தற்போது ஒரு பிரத்யேக நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்ட விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அந்த வகையில் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரான ரோகித் சர்மா தான் என் தொடர்ச்சியாக பந்து வீசுவதில்லை என்பது குறித்த தகவலை கூறுகையில் பேசியதாவது : நான் பந்து வீசும் போது எனது விரல்களில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக எனது பேட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தான் பந்து வீசுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவ்வப்போது நான் வலை பயிற்சியில் பந்துவீசினாலும் போட்டிகளின் போது பந்து வீசுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை தொடர்ந்து பந்துவீசும் போது விரல்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதனால் எனது பேட்டிங் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காகவே பந்துவீசுவதை கைவிட்டதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவை தோக்கடிச்சி வேர்ல்டுகப்பை ஜெயிக்கப்போறது அவங்கதான் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 2 டெஸ்ட் விக்கெட், 8 ஒருநாள் விக்கெட் மற்றும் 1 டி20 என ரோகித் சர்மா 15 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதோடு ஐ.பி.எல் தொடரிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 14 விக்கெட்டுகள் அவர் ஆரம்ப காலகட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் போது எடுக்கப்பட்டவை. அதன் பிறகு மும்பை அணியில் 13 சீசன்களில் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement