இந்தியாவை தோக்கடிச்சி வேர்ல்டுகப்பை ஜெயிக்கப்போறது அவங்கதான் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி

Anderson
- Advertisement -

இந்தியாவில் நாளை அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 48 போட்டிகள் இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதோடு இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போவது எந்த அணி? என்பது குறித்து எதிர்பார்ப்பும் பலரது மத்தியிலும் நிலவி வருகிறது. இது தொடரின் முதல் போட்டியில் நாளை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொறுத்தவரை இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதோடு அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் கடுமையான போட்டியை தந்தாலும் இறுதியில் அந்த வாய்ப்பை தவற விடுவார்கள்.

இதையும் படிங்க : இந்த உ.கோ சீட்டுக்கு தான் ஒரு லட்சமா? ஜெய் ஷா, பிசிசிஐயை ஆதாரத்துடன் விளாசிய ரசிகர்

அதே போன்று இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும். பரபரப்பான அந்த இறுதி ஆட்டத்தில் போட்டி மிகவும் நெருக்கமாக சென்று அதில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement