இந்த உ.கோ சீட்டுக்கு தான் ஒரு லட்சமா? ஜெய் ஷா, பிசிசிஐயை ஆதாரத்துடன் விளாசிய ரசிகர்

jay Shah ticket
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக 2022 உலகக்கோப்பையை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசி நடத்துகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடுகின்றன.

முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அட்டவணையை உள்ளூர் வாரியங்களுடன் இணைந்து ஆலோசிக்காமல் பிசிசிஐ உருவாக்கி ஐசிசியிடம் சமர்ப்பித்ததால் 2வது முறையாக மாற்றம் செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டதை அனைவரும் அறிவோம். அதை விட 2011க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு பட்ட பாட்டையும் மறக்க முடியாது.

- Advertisement -

விளாசிய ரசிகர்:
குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளுக்கு ஒரு டிக்கெட்டின் விலை பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை ஆன்லைனில் காண்பிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. எப்படியோ டிக்கெட்கள் விற்பனை முடிந்து நேற்றுடன் பயிற்சி போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி போட்டியை பார்ப்பதற்காக ஒரு ரசிகர் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ஆவலுடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்பு தான் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் அவர் உட்கார வேண்டிய டிக்கெட்டின் நம்பர் கொண்டிருக்கை இருக்கை வரிசை பறவைகள் எச்சமிட்டு பல வருடங்களாக பராமரிக்காமல் மிகவும் மோசமாக இருந்தது. உடனடியாக அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த ரசிகர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிசிசிஐ பல கோடிகளை செலவழித்து உலகக்கோப்பைக்காக பிரத்தியேகமாக மைதானங்களை நவீனப்படுத்தியதை சுட்டிக்காட்டிய இதர ரசிகர்கள் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

இருப்பினும் தனது பக்கம் நியாயத்தை வைத்திருந்த அந்த ரசிகர் அந்த இருக்கைகளுடன் டிக்கெட்டையும் சேர்த்து புகைப்படம் எடுத்து பதிவிட்டார். அப்போதும் சில தேசப்பற்று நிறைந்த இந்திய ரசிகர்கள் இந்த எடிட்டிங் வேலையெல்லாம் வேண்டாம் என்று விமர்சித்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் போட்டி நேரடியாக நடைபெறுவதையும் அந்த இருக்கைகளையும் சேர்த்து வீடியோவாக எடுத்து அந்த ரசிகர் பதிவிட்டு உண்மையை அம்பலப்படுத்திய பின்பு தான் அனைத்து ரசிகர்களுக்கும் ஹைதராபாத் மைதானத்தின் நிலை தெரிய வந்தது.

இதையும் படிங்க: வீடியோ : ஹைதராபாத் மைதான பராமரிப்பாளர்களுக்கு மரியாதை செய்த பாக் கேப்டன் பாபர் அசாம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

அதனால் இதற்குத்தான் ஒரு சீட்டின் விலை 1000 முதல் லட்ச கணக்கில் நிர்ணயித்தீர்களா? என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஹைதராபாத் வாரிய தலைவரான முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனையும் இந்திய ரசிகர்கள் சேர்ந்து சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். அதை தொடர்ந்து அந்த இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டன.

Advertisement