வீடியோ : மாஸ் பிஜிஎம்.. தல தோனி மட்டுமல்ல கிங் கோலி எண்ட்ரியையும்.. கொண்டாடிய தமிழக ரசிகர்கள்

Chepauk Fans Virat Kohli
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடை லட்சிய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுழலுக்கு சாதகமான மைதானத்தில் சுமாராக செயல்பட்டு 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு மார்ஷ், மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 200 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய டாப் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கிங் கோலியின் என்ட்ரி:
அதனால் 2/3 என ஆரம்பத்திலேயே மெகா வீழ்ச்சியை சந்தித்த இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி நங்கூரமாக விளையாடினர். குறிப்பாக 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் விராட் கோலி 85 ரன்களில் அவுட்டானாலும் ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 97* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

முன்னதாக இந்த போட்டியில் இஷான் கிசான் டக் அவுட்டானதும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சேப்பாக்கம் மைதானத்தில் தமக்கே ஒருத்தன ஸ்டைலில் பேட்டை கெய்ல் சுழற்றிக்கொண்டு களமிறங்கினார். கடந்த 15 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 25000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான தரத்தை கொண்டுள்ள அவருக்கு சேப்பாக்கம் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ஒலி, ஒளி அமைப்பு குழுவினர் விரைவில் வெளியாக இருக்கும் லியோ தமிழ் திரைப்படத்தில் உள்ள பிரபலமான “பேட்ஆஸ்” பாடலை ஒலிபரப்பினார்கள். அதனால் மேலும் உற்சாகமடைந்த தமிழக ரசிகர்கள் விராட் கோலிக்கு கூச்சலிட்டு ஆரவாரமான கைத்தட்டல் வரவேற்பை கொடுத்தனர். பொதுவாகவே சென்னை அணிக்காக தல தோனி களமிறங்கும் போது தான் இப்படி பின்னணி பாடல்களை ஒளிபரப்புவது வழக்கமாகும்.

அப்போது அந்த பிஜிஎம் வெறித்தனத்துடன் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு தமிழக ரசிகர்கள் தோனிக்கு ஆரவார வரவேற்பு கொடுப்பார்கள். அதற்கு நிகராக இப்போட்டியில் இந்தியாவின் தளபதியாக களமிறங்கிய விராட் கோலிக்கு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் பாடலுடன் தமிழக ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement