தெ.ஆ தொடரில் அசத்தப்போகும் பவுலர் இவர்தான். அதுல சந்தேகமே இல்ல – ஜாஹீர் கான் ஓபன்டாக்

Zaheer
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது. இவ்வேளையில் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த தென் ஆப்ரிக்கா தொடரில் அசத்தப்போகும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை புகழ்ந்து ஜாஹீர் கான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

IND

- Advertisement -

இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஜாஹீர் கான் தென்னாப்பிரிக்க நாட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர். அவரது கிரிக்கெட் கரியரில் தென் ஆப்பிரிக்காவில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அனுபவம் வாய்ந்த அவர் இந்த தென் ஆப்ரிக்கா தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜோகனஸ்பர்க்கில் நீங்கள் விளையாடும் போது அந்த மைதானத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது சவாலான ஒன்று மேலும் எந்தவொரு பந்துவீச்சாளரும் இதுபோன்ற மைதானங்களில் சவால்களை சந்திப்பார்கள். ஆனாலும் அதில் இருந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.

Shami

அந்தவகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் மகிழ்ச்சியாக பந்து வீசலாம். ஏனெனில் தென்னாப்பிரிக்க மண்ணில் அனைத்து மைதானங்களும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க கூடியதாக இருக்கும். எனவே இந்த தொடரில் இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று நம்புகிறேன். கூடுதலாக முகமது ஷமியின் வளர்ச்சியை பார்க்கும் போது அவர் இந்த தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 விக்கெட் எடுத்து சாதனை படைத்த வீரரை தூக்கியெறிந்த நியூசி அணி – ரசிகர்கள் அதிர்ச்சி (காரணம் என்ன?)

ஏனெனில் அவர் ஒரு அசாத்தியமான வீரர். முக்கியமான நேரத்தில் எப்படி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். எனவே நிச்சயம் அவர் இந்த தொடரில் விக்கெட் டேக்கராக விளங்குவார். மேலும் மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த தொடரை சிறப்பாக எதிர்கொள்ளும் என்றும் தான் நம்புவதாக ஜாஹீர் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement