10 விக்கெட் எடுத்து சாதனை படைத்த வீரரை தூக்கியெறிந்த நியூசி அணி – ரசிகர்கள் அதிர்ச்சி (காரணம் என்ன?)

Ajaz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற மும்பை டெஸ்ட் போட்டியின்போது நியூசிலாந்து அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசாத்தியமான சாதனையை படைத்திருந்தார். அவர் படைத்த இந்த சாதனைக்காக உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. அது மட்டுமின்றி இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட ஜெர்சி ஒன்றினையும் அஷ்வின் அவருக்கு பரிசாக வழங்கி இருந்தார்.

ajaz 2

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு அசத்தலான சாதனை படைத்த இவர் இனிவரும் தொடர்களில் நியூசிலாந்து அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அவரது இந்த நீக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரலாற்று சாதனையை நிகழ்த்திய அவருக்கு தற்போது அணியில் இடமில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவரது நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ள நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறுகையில் :

ajaz 1

எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சூழலுக்கு ஏற்றவாறு அணியை தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில் மும்பை டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் உலக சாதனை படைத்து அசத்தி இருந்தாலும் தற்போது வங்கதேச அணியின் மைதானங்களை கணக்கில் கொண்டு அதற்கேற்றாற் போன்று தான் அணியை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். அஜாஸ் படேலுக்கு இடம் கிடைக்காததால் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி – கங்குலி மோதல் விவகாரம் குறித்து தேவையில்லாமல் விமர்சனம் செய்த – ஷாகித் அப்ரிடி

மேலும் இந்த வங்கதேச தொடரில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வில்லியம்சனுக்கு பதிலாக இந்த டெஸ்ட் தொடரில் டாம் லதாம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement