விராட் கோலி – கங்குலி மோதல் விவகாரம் குறித்து தேவையில்லாமல் விமர்சனம் செய்த – ஷாகித் அப்ரிடி

Afridi
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன் என்று அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Kohli

- Advertisement -

இந்த கேப்டன் பதவி நீக்கம் குறித்து பேசிய விராட்கோலி : தனக்கு பிசிசிஐ-யிடமிருந்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என எந்த வலியுறுத்தும் வரவில்லை. தென்னாபிரிக்க தொடருக்கான அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் தான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் கங்குலி கேப்டன் நீக்கம் குறித்து பேசுகையில் : விராட் கோலியிடம் தான் முன்கூட்டியே டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும், விராட் கோலியின் ஆட்டியூட் நான் நன்றாக இருந்தாலும் அடிக்கடி சண்டை விடுவார் என்றும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரின் கருத்துக்களும் முன்னுக்குப்பின் முரணாக இருக்க அவர்களுக்கு இடையே மோதல் என்று கூறப்பட்டது.

Ganguly

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்த விவகாரம் சரியாக கையாளப்பட்டு இருக்க வேண்டும். இது கிரிக்கெட் வாரியத்தின் மிக முக்கியமான பணி. ஆனால் அதனை பிசிசிஐ சரியாக கையாளவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட வீரர்களுடனும் தேர்வுக்குழு சரியாக கலந்துரையாட வேண்டும். அதுதான் சிறந்ததாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : உங்க வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்டதில் ரொம்ப ஹேப்பி – முகமது சிராஜ் மகிழ்ச்சி

ஆனால் விராட் கோலியின் விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை இது சரியல்ல என்றும் சாஹித் அப்ரிடி விமர்சனம் செய்துள்ளார். எப்போதுமே இந்திய அணிகுறித்து தேவையில்லாமல் இது போன்ற சில பேச்சுக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் வசைபாடல்களை சந்திப்பது அப்ரிடிக்கு ஒன்றும் புதிதல்ல.

Advertisement