பதவிக்கு யார் வந்தாலும் அடிக்கடி மாற்றம் செஞ்சா.. ஜெயிக்க முடியாது.. ஜஹீர் கான் கருத்து

Zaheer Khan 6
- Advertisement -

சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை பதிவு செய்த இந்திய அணி அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ளது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள அத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற பெரிய குழப்பம் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற போதிலும் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க தவறிய ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதற்கு வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை பிசிசிஐ களமிறக்க முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அடிக்கடி மாத்தாதீங்க:
அந்த நிலைமையில் 2023 உலகக் கோப்பையுடன் பதவி காலம் நிறைவு பெற்ற ராகுல் டிராவிட் மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் எவ்வளவு காலங்கள் அவர் மீண்டும் பயிற்சியாளராக செயல்படுவார் என்பதை பற்றி பிசிசிஐ அறிவிக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் டிராவிட் மேற்பார்வையில் இந்தியா தோல்வியிலேயே சந்தித்தது.

அதனால் குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை தற்காலிகமாக மட்டுமே டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு யார் வந்தாலும் அவர்களை அடிக்கடி மாற்றினால் வெற்றிகளை குவிக்க முடியாது என ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அதிகமான கேப்டன்கள் மற்றும் துணை கேப்டன்களை பற்றி பேசுகிறோம்”

- Advertisement -

“இப்போதெல்லாம் அதிகப்படியான போட்டிகள் விளையாடப்படும் நிலைமையில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக செயல்படுவது முக்கியமானதாக இருக்கும். உங்களுக்கு அந்த நிலைத்தன்மை தேவை. தற்போது நிறைய விஷயங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெற்றியை எப்படி அடையப் போகிறீர்கள் என்பதில் நிலைத்தன்மை தேவை. எனவே யார் பயிற்சியாளராக வந்தாலும் அவர்கள் நீண்ட காலம் செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: முகமது ஷமியின் பண்ணை வீட்டின் முன்னர் திடீரெனெ குவிந்த ரசிகர்கள் – அவரே பகிர்ந்த பதிவு

“அப்போது தான் அனைத்து செயல்பாடுகளும் பின்பற்றப்பட்டு வீரர்களிடையே நல்ல தகவல் தொடர்பு இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒரு பயிற்சியாளர் வருங்காலத்தை நோக்கி குறிப்பிட்ட சில திட்டத்தை வைத்திருப்பார். ஆனால் அடுத்த 2 வருடத்திற்குள் மற்றொரு பயிற்சியாளரை மாற்றுவதால் அந்த வருங்கால திட்டங்கள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில் அடுத்த குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு டிராவிட் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்று ஜாகீர் கான் மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement