முகமது ஷமியின் பண்ணை வீட்டின் முன்னர் திடீரெனெ குவிந்த ரசிகர்கள் – அவரே பகிர்ந்த பதிவு

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றார். குறிப்பாக பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரின் பாதியில் இடம் பிடித்த முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதோடு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மூன்று விதமான இந்திய அணியிலும் முதன்மை பந்து வீச்சாளராக இருக்கும் ஷமி தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக சிறிது ஓய்வினை எடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஓய்வு நேரத்தினை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று தனது பண்ணை வீட்டில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரது பண்ணை வீட்டில் முகமது ஷமியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியான ஒரு வீடியோவில் முகமது ஷமியை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரது பண்ணை வீட்டின் முன்வரிசை கட்டி நின்றனர். அதனை கேள்விப்பட்ட முகமது ஷமியும் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து ஒவ்வொருவராக உள்ளே அழைக்கும் படி கூறி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அதனை மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முகமது ஷமி கூறுகையில் : கடந்த காலங்களில் கார்கள், பைக்குகள், டிராக்டர், லாரி, பஸ் என பலவற்றை ஓட்டியிருக்கிறேன். பயணம் செய்வதும் மீன்பிடிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாகனங்களை நிறைய ஓட்டுவேன் பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது ரொம்பவே பிடிக்கும். இந்தியாவிற்கு விளையாட தொடங்கிய பின்னர் பைக் ஓட்டுவதை குறைத்து கார் ஓட்டி வருகிறேன்.

இதையும் படிங்க : இஷான், சாம்சன் இல்ல.. 2024 டி20 உ.கோ இந்திய அணியின் கீப்பராக அவர் தான் சரியானவர்.. இர்பான் பதான்

சில சமயம் என் தாயாரை சந்திக்க கிராமத்துக்கும் செல்வேன் என்று தெரிவித்துள்ளார். இப்படி தனது சில மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசிய முகமது ஷமி தற்போது பண்ணை வீட்டில் உடற்பயிற்சி, பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சி என அனைத்தையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement