இஷான், சாம்சன் இல்ல.. 2024 டி20 உ.கோ இந்திய அணியின் கீப்பராக அவர் தான் சரியானவர்.. இர்பான் பதான்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பை தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அடுத்ததாக தெனாப்பிரிக்க மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடர்களில் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறிவதற்கான வேலையும் நடைபெற்று வருகிறது. அதில் விக்கெட் கீப்பராக ஏற்கனவே ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருப்பதால் விளையாடுவாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

- Advertisement -

இர்பான் பதான் தேர்வு:
அந்த சூழ்நிலையில் இசான் கிசான் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோர் கீப்பராக விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதிலும் சஞ்சு சாம்சன் சாதாரண போட்டிகளிலேயே வாய்ப்பு பெறாததால் இஷான் கிசான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், கில் என டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் இருப்பதால் துவக்க வீரராக விளையாடக்கூடிய இசான் கிசானை விக்கெட் கீப்பராக தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

எனவே மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஜிதேஷ் சர்மா கீப்பராக விளையாட மிகவும் சரியானவராக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் ஜிதேஷ் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். ஆரம்பத்திலிருந்தே டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆகிய எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டால் டாப் ஆர்டரில் மட்டுமே விளையாட முடியும். ஆனால் ஏற்கனவே அங்கு நெருக்கடி இருக்கிறது”

- Advertisement -

“எனவே இஷானுக்கு இடம் கிடைப்பது கடினம் என்பது என்னுடைய நம்பிக்கை. மிடில் ஆர்டரில் நீங்கள் விளையாடும் போது உடனடியாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வரும். அங்கே தான் இசான் கிசான் தடுமாறுவார். மறுபுறம் ஜிதேஷ் சற்று சூரியகுமார் யாதவ் போன்ற புதுமையான பிளேயர். அவர் லேப் ஷாட்டுகள் அடிப்பதை நீங்கள் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: கடந்த 25 வருடங்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டர் யார்? கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

“கடந்த ஒன்றரை வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி நன்றாக இருக்கிறது. சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அவர் பஞ்சாப் அணிக்காக ஃபினிஷிங் வேலையை சிறப்பாக செய்தார். வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலர்களுக்கு எதிராகவும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் கவரும் வகையில் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக ரிசப் பண்ட்க்கு பதிலாக ஜிதேஷ் சர்மா கீப்பராக விளையாட தகுதியானவர் என்று சேவாக், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் வீரர்களும் ஏற்கனவே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement