கடந்த 25 வருடங்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டர் யார்? கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

- Advertisement -

தற்போதைய நவீன யுகத்தில் வலைதளங்களின் பயன்பாடு இன்றியமையாததாக மாறியுள்ளது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வலைதளம் எனப்படும் இன்டர்நெட்டில் தேடி பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களாலும் வலைதளத்தில் தேடுவதற்கு மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் உலவி எனப்படும் ஆன்லைன் சர்ச் என்ஜின் தான் கூகுள் ஆகும்.

தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவுக்கு இந்த உலவி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் பயன்பாடுகளையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது. அப்படி உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த கூகுள் உலவியில் அன்றாட வாழ்வில் கோடிக்கணக்கான மக்கள் நிறைய விஷயங்களை தேடிப் பார்ப்பது வழக்கமாகும்.

- Advertisement -

கூகுள் அறிவிப்பு:
இந்நிலையில் தங்களுடைய உலவியில் கடந்த 25 வருடங்களில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பற்றி கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி 26,532* ரன்களை 54.36 என்ற அபாரமான சராசரியில் குவித்து 80 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதனால் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இருப்பினும் கடந்த 25 வருடத்தில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், முரளிதரன், வார்னே போன்ற உலகின் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட வீரராக சாதனை படைத்துள்ளது விராட் கோலியின் கேரியரில் மற்றுமொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பழைய கனவு காணாதீங்க.. அவங்க 3 பேர் உங்கள தெறிக்க விட்ருவாங்க.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை

அதே போல அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட கால்பந்தாட்ட வீரராக போர்ச்சுக்கலை சேர்ந்த ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டை அசால்டாக பின்னுக்கு தள்ளி கால்பந்து உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு போட்டியாக இருப்பதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. இது போக அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement